தலைமுடி சிகிச்சை

இப்படி முடி வெடிக்குதா? ஒரே நாள்ல சரியாக தேனை இப்படி செஞ்சு அப்ளை பண்ணுங்க…

முடியில் ஸ்பிலிட் எண்ட்ஸ் (பிளவு முனைகள்) மிகவும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்றாகும். காலநிலை விளைவை தவிர்த்து தினசரி அடிப்படையில் நாம் செய்யும் சில விஷயங்களும் இந்த நிலைக்கு காரணமாக அமையலாம். நாம் வெயில் காலத்தில் தான் வெயில் அதிகமாக இருப்பதால் முடி வறட்சி அதிகமாகும்.

வெடிப்பு தோன்றும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த பிரச்சினை வெயில் காலத்தை விட குளிர்காலத்தில் மிக அதிகமாக உண்டாகிறது. இதற்கான காரணங்களும் தீர்வுகளும் இதோ…

hair2

தேன்

குளிர்காலத்தில் ஸ்பிலிட் எண்ட்ஸ் பிரச்சினைக்கு சிகிச்சை அழிக்கும் வழிகளில் ஒன்று தேன் ஆகும். தேனை தயிருடன் கலந்து அதை உங்கள் தலைமுடியில் தேய்க்க வேண்டும் குறிப்பாக முனைகளில். பின்னர் 20 நிமிடங்கள் கழித்து தண்ணீர் கொண்டு தலைமுடியை கழுவவும்.

முட்டை

இது குளிர்காலத்தில் ஸ்பிலிட் எண்ட்ஸ் பிரச்சினைக்கு சிகிச்சை அழிக்கும் வழிகளில் ஒன்று ஆகும். ரோஸ்மேரியை முட்டையுடன் அடித்து அந்த கலவையை உங்கள் தலையில் மசாஜ் செய்து பிறகு ஷாம்பு போட்டு கழுவவும்.

பப்பாளி

ஒரு பழுத்த பப்பாளி பழத்துடன் தயிர் சேர்த்து அதை உங்கள் தலையில் போட்டு நிமிடம் கழித்து தலையை கழுவவும். வைட்டமின் ஏ பப்பாளியில் அதிக அளவில் இருப்பதால் தலைமுடிக்கு தேவையான போஷாக்கையும் இது வழங்குகிறது.

அவகேடோ

இது உங்கள் முடியை மென்மையாக்கும். ஆனால் நீங்கள் உங்கள் முடி ஈரமானதாக இருக்கிறதா என்று உறுதி செய்ய வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து தலைமுடியை கழுவவும்.

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய் தலைமுடியை ஈரப்பதமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. ஆலிவ் எண்ணெயை சூடாக்கி, அதை முகத்தில் மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்து ஷாம்பூவை பயன்படுத்தி தலைமுடியை கழுவவும்.

தேங்காய் எண்ணெய்

இது சிறந்த குளிர்கால முடி பராமரிப்பு குறிப்புகளுள் ஒன்றாகும். எக்ஸ்ட்ரா வெர்ஜின் தேங்காய் எண்ணெய் அதிகப்படியான பிரச்சினைகள் இல்லாமல் அனைத்து முடி பிளவுகளையும் சரி செய்கிறது. இந்த எண்ணெய் முடியை, ஈரப்படுத்த மற்றும் முடியை வலுப்படுத்த உதவுகிறது.

source: boldsky.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button