அழகு குறிப்புகள்

விதவிதமான வடிவங்களில் உருவாகும் கவுன்கள்!….

செல்வந்தர்கள், பிரபலங்களின் விருந்துகள், திருமணங்களின்போது வயது வித்தியாசமின்றி பெண்கள் விதவிதமான கவுன்கள் அணிவது இன்றளவும் இந்தியாவில் பழமை வாய்ந்த மரபாக இருந்து வருகிறது.

உயர்மட்ட வர்க்கத்தினரிடையே கவுன் அணிவதை பெண்கள் ஒரு கலாசாரமாகவே கடைப்பிடிக்கின்றனர்.

மாலை நேரத்தில் உடலை மறைக்கும்படியான நீண்ட கவுன் அணிவது வழக்கமாகும். இது இப்போது நைட்டியாக உருமாறியுள்ளது.

பொதுவாக இந்த கவுன்கள் ஷிப்பான், வெல்வெட், சாட்டீன், பட்டு போன்ற துணிகளை கொண்டு உருவாக்கப்படுவதாகும்.

kavun

மாலை நேர கவுன் மற்றும் பால்ரூம் நடனத்தின் போது அணியும் கவுன்களுக்கும் வித்தியாசம் உண்டு.

பால்ரூம் நடன கவுன்கள் நீளமாக, கண்கவர் வடிவமைப்புகளுடன் ஸ்லீவ்லஸ் ஆக இருக்கும் . மாலை நேர கவுன்கள் ஸ்ட்ரைப்ஸ் மற்றும் ஸ்ட்ராப், ஸ்லீவ்ஸ் கொண்டதாக இருக்கும்.

ஆரம்ப காலங்களில் நடுத்தர வயது பெண்கள் வீட்டிலிருக்கும் போது எந்த விதமான உடைகள் அணியலாம் என்று தீர்மானிக்க முடியாதபோது, விசேஷமான நாட்களில் கவுன் போன்ற மேலாடையை அணியத் தொடங்கினார்கள்.

பல நூற்றாண்டுகள் வரை இந்த கவுன்கள் அணியும் நாகரீகம் வெகுவாக பரவவில்லை என்றாலும் விசேஷ நிகழ்ச்சிகளின்போது அணிவது வழக்கமாக தொடங்கியது.

18-ஆம் நூற்றாண்டில் பின் முதுகு தெரியும்படி வடிவமைத்த கவுன்கள் பிரபலமாயின. 19-ஆம் நூற்றாண்டில் மாலை நேர கவுன்கள் விற்பனைக்கு வரத் தொடங்கின.

விக்டோரியா அரசி காலத்தில் மாலை நேர கவுன்கள் தரையில் புரளுமளவுக்கு நீளமாக தயாரிக்கப்பட்டன நீளமான ஸ்லீவ்ஸ்களுடன் உருவாக்கப்பட்ட கவுன்கள், பின்னர் தோள்களிலிருந்து இறங்கி முதுகு தெரியும்படி தயாரிக்கப்பட்டன.

காலப் போக்கில் லோநெக்குடன் தயாரிக்கப்பட்ட கவுன்கள், குறைந்த நீள ஸ்லீவ்ஸ்களுக்கு மாறி மீண்டும் நீள ஸ்லீவ்ஸ்களுக்கு மாறி, ஸ்லீவ்லெஸ் மற்றும் லோநெக் வடிவத்திற்கு மாறியதோடு கையுறை அணியும் வழக்கம் ஏற்பட்டது.

எட்வர்டியன் காலத்தில் சக்கரவர்த்தியின் நிழலுருவம் பதித்த கவுன்கள் பிரபலமாயின. இன்று மேற்கத்திய திருமண உடைகள் வெள்ளை நிறத்தில் தயாரிக்கப்பட்டாலும், மற்ற வெளிர் நிறங்களிலும் தயாரிக்கப்படுவதுண்டு.

1840 -களில் விக்டோரிய மகாராணி திருமணம் முதல் சாக்ஸ் கேபர்க் திருமணம் வரை வெள்ளை நிற திருமண உடைகள் அவ்வளவாக பிரபலமடையவில்லை.

மகாராணி தனக்கென்று உருவாக்கிய வெள்ளை நிற திருமண உடையை புகைப்படமெடுத்து அதிகார பூர்வமாக வெளியிட்ட பிறகே, பெண்கள் வெள்ளை நிற திருமண உடையை ஏற்றுக் கொள்ளத் தொடங்கினர்.

பின்னர் திருமணத்தின்போது வெள்ளை நிற உடை அணிவது சம்பிரதாயமாக கருதப்பட்டது. அதற்கு முன் மணமகள் எந்த நிறத்தில் வேண்டுமானாலும் திருமண உடை அணியலாம் என்றிருந்த நிலைமை மாறி, வெள்ளை நிறம் தூய்மை மற்றும் கன்னித் தன்மையை பிரதிபலிப்பதாக கருதி அனைத்துப் பெண்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

1920- ஆம் ஆண்டுகளில் வீட்டில் அணியும் கவுன்கள் எளிமையான தோற்றத்தில் தயாரிக்கப்பட்டாலும், 1930- ஆம் ஆண்டு முதல் சற்று கவர்ச்சியாகவும் விதவிதமான நிறங்களில் தயாரிக்கத் தொடங்கினார்கள்.

குறுகலான இடையுடன் இளவரசி தோற்றத்துடன் தயாரிக்கப்படும் கவுன்களை பெண்கள் விரும்பி அணியத் தொடங்கினார்கள்.

தற்போது பிரபலமானவர்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு மட்டுமின்றி, நடுத்தர குடும்பங்கள் நிகழ்ச்சிகள், வரவேற்புகள் போன்றவைகளுக்கும் பெண்கள் கவுன் அணிந்து வருவதை கௌரவமாக கருதுகின்றனர்.

அதே சமயம் வீட்டில் இருக்கும்போது கவுன் அணியும் வழக்கம் மாறி நைட்டி அணிவது வழக்கமாகிவிட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button