அழகு குறிப்புகள்சரும பராமரிப்புமுகப் பராமரிப்பு

வீட்டிலேயே செய்யும் ஃபேஸ்மாஸ்க்!…

சருமத்தில் அழகை பாதுகாக்க வீட்டிலேயே முகத்திற்கு இயற்கை முறையில் மாஸ்க் போடுவது எப்படி என்று பார்க்கலாம்.

முகத்திற்கு மாஸ்க்கை பயன்படுத்துவது எப்படி?

* பார்லரில் செய்பவர்கள் முகத்தை கிளென்சிங் மில்கையும், வீட்டில் செய்பவர்கள் தேங்காய் எண்ணெய் அல்லது காய்ச்சாத பாலையும் பஞ்சில் தொட்டு முகத்தை துடைத்து சுத்தம் செய்யவும்.

கண் அடியில், வாய்பகுதியைச் சுற்றி மாஸ்க் போடுவதை தவிர்க்கவும். மாஸ்க் போட்டவர்கள் ஒரே நிலையில் இருக்க வேண்டும்.

ஆடவோ, அசையவோ கூடாது. அப்படிச் செய்தால் முகம் விர்ரென்று பிடித்து சருமம் பாதிக்கப்படும்.

face3 2

* மற்றவர்களுடன் பேசக்கூடாது.

* மாஸ்க்கை துடைக்கும்போது வெதுவெதுப்பான நீரிலோ அல்லது ஒரு காட்டன் துணியில் ஐஸ் க்யூப் வைத்தோ துடைக்கவேண்டும்.

வீட்டிலேயே செய்யும் ஃபேஸ்மாஸ்க்

பிரட் மாஸ்க் :

ஒரு பிரட் ஸ்லைஸ் எடுத்துக் கொண்டு 2 டீஸ்பூன் பால், 1 டீஸ்புன் தேன் கலந்து அரை மணிநேரம் ஊற வைத்து முகம் முழுவதும் தடவவும்.

பதினைந்து நிமிடம் கழித்து முகத்தில் ஊறிய பிரட்டை மசாஜ் பண்ணி தேய்த்து எடுக்கவும்.

இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி சருமத்திற்கு நல்ல நிறத்தையும் பொலிவையும் கொடுக்கும்.

பாதாம் மாஸ்க் :

மிகவும் வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு பாதாம் மாஸ்க் மிகவும் நல்லது. எட்டு பாதாம் பருப்புகளை வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்கவும்.

மறுநாள் அரைத்து ஒரு டீஸ்பூனும் பாலோடு கலந்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளபளப்பாகும்.

கரும்புள்ளிகள் மறையும். இந்த மாஸ்க்கை வாரம் இருமுறை செய்து வந்தால் நல்ல பலனை தரும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button