thodai
ஆரோக்கியம் குறிப்புகள்ஆரோக்கியம்

தேவையற்ற கொழுப்பை கரைத்து, உடலை ஃபிட்டாக்க உடற்பயிற்சி!…

முன்பக்க தொடை மற்றும் பின்பக்கம், இடுப்பு பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைத்து, உடலை ஃபிட்டாக்க இந்த உடற்பயிற்சியை தொடர்ந்து செய்து வரலாம்.

தொடை மற்றும் பின்பக்க சதையை குறைக்கும் உடற்பயிற்சி

தற்போதுள்ள இளம் தலைமுறையினருக்கு உடல் உழைப்பு இல்லாததால் உடல் பருமனால் அவதிப்படுகின்றனர். அதிலும் பெண்கள் குறிப்பாக தொடை, இடுப்பு, பின்பக்கம் போன்ற பகுதிகளில் அதிகப்படியான சதையால் அவதிப்படுவதோடு பார்க்கவும் அசிங்கமான தோற்றத்தை அளிக்கின்றனர்.

thodai

இவர்கள் தினமும் வீட்டில் இருந்தபடியே 20 நிமிடம் பயிற்சி செய்தால் போதுமானது. இந்த வீட்டில் இருந்தபடியே செய்யலாம். இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் நேராக நின்று, நடப்பது போல ஒரு காலை முன்பக்கமாவும் மற்றொரு காலை பின்பக்கமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.

இப்போது முன்பக்க காலை மடித்து நிற்பது போல் வைத்துக் கொண்டு, பின்பக்க கால் முட்டியை தரையை நோக்கி (ஆனால் தரையில் படக்கூடாது) கொண்டு வர வேண்டும். பின்னர் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும்.

இது போல் மற்றொரு காலுக்கும் செய்ய வேண்டும். இதே போல இரு கால்களுக்கும் தலா 20 முறை செய்ய வேண்டும். பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம். தினமும் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.

பயன்கள் :

முன்பக்க தொடை மற்றும் பின்பக்கம், இடுப்பு பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைத்து, ஃபிட்டாக்கும்.

Related posts

உங்கள் நாக்கு உங்களின் ஆரோக்கியத்தைப் பற்றி சொல்லும்..!!தெரிந்துகொள்வோமா?

nathan

குழந்தைகளுக்கு மசாஜ் செய்ய தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவது நல்லதா?

nathan

பீட்ரூட் தீர்க்கும் நோய்கள்!…

nathan

குழந்தைகளின் நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெற்றோர் செய்யவேண்டியவை…

nathan

ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்கள்!!!

nathan

மிளகின் மருத்துவ குணங்கள்…

sangika

இலவங்கப்பட்டை பற்சொத்தை போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு

nathan

பெண்களின் பாலுணர்ச்சியைத் தூண்டிவிடும் உணவுகள்!

nathan

கைசுத்தம் காப்போம்!

nathan