ஆரோக்கியம் குறிப்புகள்

உள்ளாடை பராமரிப்பு எப்படினு தெரியுமா?…

பெண்கள் வெளி அலங்காரத்துக்கு கொடுக்கும் அழகை உள் அலங்காரத்துக்கு கொடுப்பதில்லை என்பதை பெண்களே உணர்ந்துகொள்கிறார்கள். குறிப்பாக ஆடைகள் அழகைக் காட்டுவதாக தேர்ந்தெடுப்பவர்கள் உள்ளாடைகளை அதிக விலை கொடுத்து வாங்க விரும்புவதில்லை. அது தமக்கு பொருத்தமாக இருக்குமா..அளவில் சரியாக இருக்குமா..என்று பெரும்பாலும் பார்ப்பதில்லை.

ulladai

உள்ளாடைகளை ஆறிலிருந்து ஒன்பது மாதங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்… ஆனால் கொக்கி அறுந்தாலும், துணி நைந்திருந்தாலும் உள்ளேதானே அணிகிறோம் என்று அலட்சியப்படுத்தும் பெண்கள் இறுதியில் சருமப் பிரச்னைகள், அலர்ஜிகள் போன்றவற்றால் பாதிக்கப்படுகிறார்கள்.

உள்ளாடைகள் உடலுக்கும் சருமத்துக்கும் போதிய காற்றோட்டத்தைக் கொடுப்பதாக இருக்க வேண்டும். உள்ளாடை அழகாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். சிந்தடிக், நைலான் போன்ற உள்ளாடைகள் உடலிலிருந்து வெளியேறும் வியர்வைகளை உறிஞ்சாது. மேலும் இவை இறுக்கமாக இருக்கும் பட்சத்தில் சருமம் தடிப்பு, சிவப்பு, எரிச்சல் போன்றவை உண்டாகும். உடலுக்கு போதிய காற்றும் தடைபடுவதால் இடுக்குகளில் வியர்வை நீடித்து சருமத்தை அதிக அளவு அலர்ஜிக்குள்ளாக்கும்.

உள்ளாடைகளை மிஷினில் போடாமல் கைகளால் துவைப்பதே நல்லது. உள்ளாடைகளை தனி சோப் கொண்டு அலசி நல்ல வெயிலில் காயவிட வேண்டும். அப்போதுதான் கிருமிகள் வெயில் பட்டு அழிந்து போகும். சிலர் குளியலறையில் துவைத்து அங்கேயே காயப்போடுகிறார்கள். இது ஆரோக்கியமானதல்ல என்பதோடு சற்று ஈரம் இருந்தாலும் சருமத்துக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி விடும்.

உள்ளாடையைத் தேர்வு செய்யும் போது இறுக்கமானதாகவோ, சற்றே தொளதொளப்பாகவோ தேர்வு செய்ய கூடாது. சரியான அளவில் உபயோகிக்க வேண்டும். மழைக்காலங்களில் தொப்பலாக நனைந்துவிட்டால் மேலாடையை மட்டும் மாற்றாமல் உள்ளாடையையும் மாற்ற வேண்டும். அதேபோன்று கோடைக்காலங்களில் தினமும் இரண்டு வேளை குளித்து உள்ளாடையை மாற்ற வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். குழந்தைகள் குறிப்பாக பெண் குழந்தைகள், பதின்ம வயதினர், இளம் பெண்கள் அனைவருக்கும் இது பொருந்தும்..

உள்ளாடைகளைத் தேர்வு செய்வதிலும்.. தொடர்ந்து உபயோகிக்கும் கால அளவிலும் கவனம் செலுத்துங்கள்.. உள்ளாடைகளைப் பராமரித்தால் தான் உடலை பராமரிக்க முடியும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button