ஆரோக்கியம்

அற்புத பயிற்சியே மூச்சு பயிற்சி பிராணாயாமம்….

எளிமையான பயிற்சிகள் மூலம் வலிமையான உடலையும் உயிரையும் செதுக்க அவர்கள் உருவாக்கிய அற்புத பயிற்சியே மூச்சு பயிற்சி பிராணாயாமம்.

moochchu

பிராணாயாமம், மூச்சு பயிற்சியின் நன்மைகள்

எளிமையான பயிற்சிகள் மூலம் வலிமையான உடலையும் உயிரையும் செதுக்க அவர்கள் உருவாக்கிய அற்புத பயிற்சியே மூச்சு பயிற்சி பிராணாயாமம்.

பிராணயாமா அல்லது பிராணாயாமம் என்பது ஒரு சமஸ்கிருத சொல், அதற்கு “பிராணா அல்லது மூச்சைக் கட்டுப்படுத்தி வைத்தல்” என்பது பொருள். அந்தச் சொல் இரு சமஸ்கிருத சொற்கள் இணைந்து உருவாக்கப்பட்டது. அது “பிராணா” வாழ்வாற்றல் அல்லது முக்கியமான வலிமை குறிப்பாக மூச்சோட்டம் மற்றும் “ஆயாமா” நிறுத்தி வைத்தல் அல்லது கட்டுப்படுத்தி வைத்தல் என்று பொருள்.அது அவ்வப்போது வாழ்வாற்றலை கட்டுப்படுத்துதல் என்று அர்த்தமாகும்.

யோகாவில் ஒரு தொழில்நுட்ப வார்த்தையாகப் இதை பயன்படுத்தும்போது அது பெரும்பாலும் குறிப்பாக “மூச்சுக் கட்டுப்பாடு” மூச்சு பயிற்சி என்றே அழைக்கப்படுகிறது.

முதலில் சுவாசத்தை உள்ளே இழுப்பது. இதை பூரகம் என்று பெயர்.

இவ்வாறு உள்ளே நிறுத்திய சுவாசத்தை வெளிவிடுதலை ரேசகம் என்பர்.

இழுத்த சுவாசத்தை உள்ளே நிறுத்தி வைப்பது. இதை கும்பகம் என்று கூறுவர்.

வெளியே சுவாசத்தை விட்டபிறகு அப்படியே வெளியே சுவாசத்தை நிறுத்துதல்.இதை பகிரங்க கும்பகம் அல்லது கேவல கும்பகம் என்றும் கூறுவர்கள். பிராணாயாமம் பயிற்சியை பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து தான் செய்ய வேண்டும்.

பிராணயாமா என்பது ‘பிராண’ மற்றும் ‘அயாமா’ என்ற வார்த்தைகளின் கூட்டாகும். ‘பிராண’ என்றால் அதிமுக்கிய ஆற்றல் திறன் என்று பொருளாகும். அதே போல் ‘அயாமா’ என்றால் கட்டுப்பாடு என்று பொருளாகும். பிராணயாமா என்பது ஒரு உன்னத உடற்பயிற்சியாகும். மூச்சை உள்ளிழுத்து, வெளியேற்றி, அடக்கி வைப்பதை ஒழுங்கு முறைப்படி இதனை செய்ய வேண்டும்.

வேறு எந்த செயல்முறையும் தர முடியாத பல நல்ல உடல்நல பயன்களை பிராணாயாமம் உங்களுக்கு தருவதால் இந்த சுவாசப்பயிற்சி வழிமுறை உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி பல அதிசயங்களை நிகழ்த்தும். பிராணாயாமம் செய்வதால் கிடைக்கும் எண்ணிலடங்கா பயன்களில் உடல் மற்றும் மன ரீதியான பயன்கள் என இரண்டுமே கிடைக்கும்.

பிராணாயாமம் என்பது சிறந்த மூச்சுப்பயிற்சியாகும். அதனால் உங்கள் நுரையீரலும் சிறப்பான முறையில் செயல்படும். சுவாசக் கோளாறுகள் அல்லது ஆஸ்துமா உள்ளவர்களுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும்.

உங்கள் உடல் எடையை குறைப்பதற்கும் பிராணாயாமம் உதவுகிறது என்ற சந்தோஷமான விஷயத்தையும் தெரிந்துக் கொள்ளுங்கள். பிராணாயாமம் பயிற்சியை தொடர்ச்சியாக செய்து வந்தால் நீங்களே நல்ல வித்தியாசத்தை உணர்வீர்கள்.

உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க யோகாவில் பல வழிகள் இருக்கிறது. அவைகளில் புகழ்பெற்ற வழிகளில் ஒன்று தான் பிராணாயாமம்.

பிராணாயாமம் உடலுக்கு பல நல்ல பயன்களை தருவதோடு, அதோடு இது மனதை திடமாக வைப்பதற்கும் உதவுகிறது. தினமும் பிராணாயாமம் பயிற்சியை செய்து வாருங்கள உங்கள் மன அழுத்தம் மற்றும் பதற்றம் தணியும். ஒரு நல்ல யோகா ஆசிரியிடம் இந்த பயிற்சியை கற்ற பிறகு, தானாக இதனை தினசரி செய்து வாருங்கள். சில நிமிட பயிற்சி சீரிய மாற்றம் கொடுக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button