அறுசுவைகார வகைகள்

தீபாவளி ஸ்பெஷல்:கார முறுக்கு(முள்ளு முறுக்கு)

mullu thenkuzhal murukku

தேவையான பொருட்கள்:

முறுக்கு மாவு – 400 மில்லி
அரிசி மாவு – 1/2 கிலோ
தேங்காய்ப் பால் – 150 மில்லி
நெய் –  3 ஸ்பூன்
உப்பு – 3 ஸ்பூன்
சீனி – 1 ஸ்பூன்
தண்ணீர் – தேவைக்கு

DSC01501



செய்முறை:

DSC01504

முறுக்கு மாவையும் அரிசி மாவையும் ஒன்றாக கலந்துக் கொண்டு, அதில் நெய் சேர்த்து, சீனி மற்றும் உப்பை தேங்காய்ப் பாலில் கலக்கி அதையும் சேர்க்கவும்.

DSC01509

நன்கு கலந்துவிட்டு, தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பத‌த்தில் பிசைந்து வைக்கவும்.

DSC01512

முறுக்கு உரலில் ஸ்டார் அச்சில் மாவைப் போட்டு, ஒரு தட்டில் முறுக்கைப் பிழிந்துக் கொள்ளவும்.(இப்படி தட்டில் பிழியும்போது முறுக்கு ஒரே வடிவத்தில் அழகாக இருக்கும்)

DSC01517

எண்ணெய் சூடானவுடன் தட்டில் பிழிந்து வைத்துள்ள முறுக்கை மெதுவாக எண்ணெயில் சரித்து விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைக்க‌வும்.

DSC01522

சரியான பதத்தில் முறுகியவுடன் எண்ணெய் வடிய‌விட்டு எடுக்கவும். கடினமில்லாத, மொறு மொறுப்பான முள்ளு முறுக்கு தயார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button