ஆண்களுக்கு

ஆண்கள் அழகாக எளிய டிப்ஸ்…! அழகாக்கும் ஆயுர்வேதம்! ~ பெட்டகம்

 அழகாக்கும் ஆயுர்வேதம்!

ளைஞர்களின் இன்றைய பெரிய பிரச்னை,
முடிகொட்டுவது. அமேசான், ஆப்பிரிக்கக் காடுகளில் விளையும் அபூர்வ
மூலிகைகள் முடி வளர உதவும் என்றால், அதற்காக எவ்வளவு செலவு செய்யவும்
தயாராக இருக்கிறார்கள். முடிக்கு அடுத்தபடியாக ஆண்களின் முரட்டு
சருமத்துக்கான கிரீம்கள் சந்தையில் பிரபலம். உண்மையில் இவற்றால் பலன்
பெரிதாக இருக்காது. ஆண்களுக்கு அழகும் ஆரோக்கியமும் அதிகரிக்க,
ஆயுர்வேதத்திலேயே ஏராளமான சிகிச்சைகள் இருக்கின்றன.முடி கொட்டுதல்அதிக நேரம் ஏ.சி அறையில் இருப்பது, மன அழுத்தம், தவறான நேரத்தில்
தூங்குவது போன்ற காரணங்களால் சீக்கிரத்தில் முடி கொட்டிவிடுகிறது. முதலில்
என்ன காரணத்தால் முடி கொட்டுகிறது என்பதை அறிந்து, அதற்கேற்ப சிகிச்சை
எடுப்பதே சிறந்தது.

செம்பருத்தி எண்ணெய், திரிபலா எண்ணெய் ஆகியவற்றால்,
வாரம் ஒருமுறை தொடர்ந்து மூன்று மாதங்களுக்குத் தலைக்கு மசாஜ்
செய்வதுவந்தால், மன அழுத்தம் குறையும். தினமும் தலைக்குப் பாதாம் எண்ணெய்
தேய்த்து, 20 நிமிடங்கள் காயவைத்து, பிறகு குளிர்ந்த நீரில் தலையை அலச
வேண்டும்.

பாதாம் எண்ணெய் நன்றாக  முடி வளர உதவும். இரவு எண்ணெய்
தேய்த்துவிட்டு, காலையில் தலைக்குக் குளிக்கக் கூடாது. உடல்வாகைப்
பொறுத்து, ஒவ்வொருவரும் பயன்படுத்த வேண்டிய எண்ணெய் மாறுபடும்.

p42a

கருவளையம்

கம்ப்யூட்டர், மொபைல் ஃபோன்களை தூங்காமல் அதிக நேரம் பயன்படுத்துவதால்,
கண்களை சுற்றிக்் கறுப்பு நிறத் திட்டுகள் படியும். இதனைத் தவிர்க்க,
கண்ணுக்கு மசாஜ் அவசியம். காலை எழுந்த பிறகும் இரவு தூங்கும் முன்பும்,
மோதிர விரலால் நல்லெண்ணையைத் தொட்டு, கண்களைச் சுற்றி மென்மையாக கடிகார
முள் திசையில் மசாஜ் செய்துகொள்ளலாம்.

இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை, ஒரு
நிமிடம் நன்றாகக் கண்களை மூட வேண்டும். கண்களில் ஈரப்பதம் குறைந்தால்,
அவ்வப்போது லேசாகக் கைக்குட்டையைத் தண்ணீரில் நனைத்து, கண்களைத் துடைக்க
வேண்டும். 15 நிமிடங்களுக்கு ஒரு முறை நன்றாகக் கண்களைச் சிமிட்டுவது
அவசியம்.

கறுமை நிறத் திட்டுகள்
ஐந்து கிலோமீட்டருக்கு மேல் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்பவர்களுக்கு,
கை, கால் மற்றும் முகத்தில் கருமை நிறத் திட்டுகள் உருவாகும். நாளடைவில்
தோலின் பொலிவு மறைந்து, முதுமைத் தோற்றம் வந்துவிடும்.

இவர்கள் கருமை
படர்ந்த இடத்தில், ஏலாதி தேங்காய் எண்ணெயும், பிண்டத் தைலமும் தடவி மசாஜ்
செய்யலாம். உடல் முழுவதும்கூட மசாஜ் செய்யலாம். பிறகு, நவரா அரிசியுடன்
ஆயுர்வேதப் பொருட்கள் கலந்த பவுடரைக்கொண்டு, நாங்கள் ஸ்க்ரப் செய்வோம்.
பிறகு, குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்தின் உள்ளே இருக்கும் அழுக்குகள்
நீங்கி, தோல் பொலிவு அடையும்.

p42b

பச்சைப் பயறை பொடியாக அரைத்து, தயிருடன் கலந்து கை, கால், முகம்
ஆகியவற்றில் பேக் போட்டு, 20 நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்யலாம். பிறகு
குளிர்ந்த நீரில் கழுவி, சிறிய ஐஸ்கட்டிகளை ஒரு பருத்தித் துணியில்வைத்து,
மென்மையாக ஒற்றி எடுத்தால், முகம் பொலிவு பெறும். தக்காளிச் சாறு மற்றும்
எலுமிச்சைச் சாறு கலந்த கலவையை வாரம் மூன்று முறை குளிக்கும் முன்பு தடவி,
20 நிமிடங்கள் கழித்துக் குளித்தால், கறுப்பு நிறத் திட்டுகள் அகலும்.

தோல் வறட்சி

குங்குமப்பூ, தேன், எலுமிச்சைச் சாறு, பால் மற்றும் ஆயுர்வேத எண்ணெய்கள்
கொண்டு, மாதம் ஒரு முறை  உடல் முழுவதும் மசாஜ் செய்துகொள்ளலாம். இதனால்,
உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கி, உடல் பொலிவு பெறும். தோல்
மினுமினுப்பாகும். அடிக்கடி தக்காளி ஜூஸ் அருந்துவது, தோலில் வறட்சி
ஏற்படாமல் தடுக்கும்.

முகப்பரு நீங்க

இளம் வயதினர் முகப்பரு வராமல் இருக்க, புதினா, கொத்தமல்லி மற்றும்
ஆயுர்வேதப் பொருட்கள் கலந்த கலவையால், அடிக்கடி ஃபேஸ் பேக் போடலாம். வாரம்
இரு முறை இப்படிச் செய்துவந்தால், முகப்பரு வருவதற்கான வாய்ப்புகள்
குறையும். முகப்பரு வந்தால், கிள்ளக் கூடாது.
கிரீம்கள் தடவக் கூடாது.
எண்ணெய் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். முகப்பரு மறைந்ததும், கறுப்பு நிறத்
திட்டுகள் உருவாவதைத் தடுக்க, முகத்துக்கு மசாஜ் செய்ய வேண்டியது அவசியம்.

எண்ணெய் சருமத்தினர் வாரம் இருமுறை அரை டீஸ்பூன் வெந்தயத்தை இரவே
தண்ணீரில் ஊறவைத்து காலையில் தண்ணீரோடு அந்த வெந்தயத்தையும் சாப்பிட்டால்,
உடல் குளுமை அடையும். முகப்பருவும் வராது.

p42c

ஆண்கள் அழகாக எளிய டிப்ஸ்…

1.ஆண்களுக்கு முழங்கை மூட்டுக்கள் எளிதில் கருமை அடைகின்றன. இதனைத்
தவிர்க்க தக்காளிச் சாறு, தயிர், தேன், கடலை மாவு ஆகிய நான்கையும் கலந்து
பேஸ்ட்டாக்கி, வாரம் ஒருமுறை இரண்டு கைகள் முழுவதும் தடவி வந்தால் கருப்பு
நிறத் திட்டுக்கள் மறையும்.

2. கற்றாழை, உடல் குளுமைக்கும் தோல் பொலிவுக்கும் ஏற்றது. வெயில்
காலங்களில் கற்றாழையை ஏழு முறை கழுவி, கற்றாழை ஜெல் எடுத்து அதனுடன்
பசும்பால் சேர்த்து கை கால்களில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த
நீரில் கழுவிய பிறகு வெளியே போனால், சூரியக் கதிர்களில் இருந்து கை,கால்களை
பாதுகாக்க முடியும்.

3.முகம் பொலிவு அடைய, அரை கப் பப்பாளி பழம், ஒரு டேபிள் ஸ்பூன்
எலுமிச்சைச் சாறு, ஒரு டீஸ்பூன் தேன் ஆகியவற்றை கலந்து முகத்துக்கு பேக்
போட்டு 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ
வேண்டும்.அதன் பின்னர் மீண்டும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த பேக்
கை, கால்களிலும் போட்டுக்கொள்ளலாம்.

4. உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கவும், உடல் பொலிவாக இருப்பதற்கும்
பழச்சாறுகள் துணைபுரிகின்றன. தினமும் இரண்டு அல்லது மூன்று பழச்சாறுகள்
அருந்தி வந்தால், உடல் புத்துணர்வு அடைவதுடன் பொலிவும் கிடைக்கும்.
தர்பூசணி ஜூஸ், வெள்ளரி ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ், புதினா ஜூஸ், எலுமிச்சை ஜூஸ்,
ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் போன்றவை அருந்தலாம்.

5.ரோஜா இதழ்களை இரவிலேயே ஒரு பக்கெட் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.
காலையில் எழுந்து ரோஜாவில் ஊறவைத்த தண்ணீரில் குளித்தால், உடல் முழுவதும்
நறுமணம் வீசும், உடலில் புத்துணர்ச்சி கிடைக்கும். தோல் பொலிவடையும்.

6.சூடான உடல்வாகு கொண்டவர்கள், தினமும் குளித்த பின்னர் புதினா இலைகளை
தண்ணீருடன் சேர்த்து கொதிக்கவைத்து நன்றாக ஆறிய  பின்னர், பருத்தித் துணி
அல்லது பஞ்சு எடுத்து புதினா தண்ணீரில் நனைத்து உடல் முழுவதும்
தடவிக்கொள்ளவேண்டும். உடலில் வியர்வை துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்தும்.

7.முகத்தில் உள்ள கறுப்புத் திட்டுக்கள் மறைய, தினமும் முட்டையின்
வெள்ளைக்கரு எடுத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து முகம்
கழுவினால், கறுப்பு நிறத் திட்டுக்கள் மறையும். முகம் புத்துணர்ச்சியாக
இருக்க ஐஸ் கட்டிகளைகொண்டு முகத்தில் மசாஜ் செய்யலாம்.

8.வெயில் காலங்களில்இறுக்கமான ஜீன்ஸ் தவிர்க்கவும். உள்ளாடைகள்
பருத்தித் துணியால் இருப்பதே சிறந்தது. உள்ளாடைகளை தினமும் துவைத்து
வெயிலில் காய வைக்க வேண்டும். ஆறு மாதங்களுக்கு மேல் ஒரே உள்ளாடையைப்
பயன்படுத்தக் கூடாது.

 

Related Articles

One Comment

  1. எனக்கு இந்த பதிவுகளையும் இது போன்ற பதிவுகளையும் எனக்கு அனுப்பவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button