முகப் பராமரிப்பு

உங்களுக்கு வெயில்ல முகம் ரொம்ப வறண்டு போயிடுச்சா?

வறண்ட சருமம் என்பது நிறைய பேர்களுக்கு தொல்லை தரக்கூடிய விஷயமாகவே உள்ளது. சில பேருக்கு இந்த பிரச்சினை நிரந்தரமாகவும் சில பேருக்கு சீசன் மாற்றங்களை பொருத்தும் ஏற்படும். வறண்ட சருமம் இருந்தாலே தோல் அரிப்பு, தோல் உரிதல் போன்ற பிரச்சினைகளும் ஏற்படும்.

சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருத்தல், இறந்த செல்களை நீக்குதல், ஆல்கஹால் கலந்த அழகு பொருட்களை தவிருங்கள் மற்றும் பல டிப்ஸ்களை ப்லோ செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
வெயில்ல முகம் ரொம்ப வறண்டு போயிடுச்சா? 2 நிமிஷத்துல எப்படி சரி பண்றதுனு பாருங்க?
சருமத்தை வறண்டு போக விடாதீர்கள்

உங்கள் சருமம் போதிய ஈரப்பதம் இல்லாமல் வறண்டு போவதை முதலில் தவிருங்கள். சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை கொடுத்து போஷாக்குடன் வைத்துக் கொள்ளுங்கள். இதனால் உங்களுக்கு பொலிவான ஆரோக்கியமான சருமம் கிடைக்கும். எனவே நிறைய தண்ணீர் குடியுங்கள்.

வெயில்ல முகம் ரொம்ப வறண்டு போயிடுச்சா? 2 நிமிஷத்துல எப்படி சரி பண்றதுனு பாருங்க?
இறந்த செல்களை நீக்குங்கள்

இறந்த செல்களை தினமும் நீக்குவது சருமத்தை புதுப்பிக்கும். எனவே வாரத்திற்கு ஒரு முறையாவது ஸ்க்ரப் பயன்படுத்தி இறந்த செல்களை நீக்குங்கள். இது சரும துளைகளை திறந்து பருக்கள் வராமல் காக்கும்.

வெயில்ல முகம் ரொம்ப வறண்டு போயிடுச்சா? 2 நிமிஷத்துல எப்படி சரி பண்றதுனு பாருங்க?
ஆல்கஹால்

வறண்ட சருமம் உடையவர்கள் எக்காரணம் கொண்டும் ஆல்கஹால் கலந்த அழகு பொருட்களை தவிருங்கள். ஏனெனில் இது உங்கள் நிலைமையை மேலும் மோசமாக்கி விடும். எனவே அழகு சாதனப் பொருட்கள் வாங்கும் போது அதன் லேபிள்களை நன்றாக படித்து கொள்ளுங்கள்.

வெயில்ல முகம் ரொம்ப வறண்டு போயிடுச்சா? 2 நிமிஷத்துல எப்படி சரி பண்றதுனு பாருங்க?
பேஸ் எண்ணெய்கள்

வறண்ட சருமம் உடையவர்கள் பேஸ் எண்ணெய்களைக் கொண்டு அவ்வப்போது மசாஜ் செய்து வரலாம். இது சருமத்திற்கு மாய்ஸ்சரைசிங் தன்மை தருவதோடு தோல் உரிதலை தடுக்கும். சருமம் மென்மையாக மாறும்.

வெயில்ல முகம் ரொம்ப வறண்டு போயிடுச்சா? 2 நிமிஷத்துல எப்படி சரி பண்றதுனு பாருங்க?
பவுடர் மேக்கப் வேண்டாம்

உங்களுக்கு வறண்ட சருமம் என்றால் பவுடர் மேக்கப் போடுவதை தவிருங்கள். ஏனெனில் இது ஆங்காங்கே திட்டுகளை ஏற்படுத்தி விடும். அதற்கு பதிலாக லிக்யூட் டைப் மேக்கப் சிறந்தது.

வெயில்ல முகம் ரொம்ப வறண்டு போயிடுச்சா? 2 நிமிஷத்துல எப்படி சரி பண்றதுனு பாருங்க?
வெதுவெதுப்பான நீரில் குளியுங்கள்

சூடான மற்றும் குளிர்ந்த நீர் குளியல் உங்கள் சருமத்தை இன்னும் வறண்டு போக வைத்து விடும். எனவே வெதுவெதுப்பான குளியலை எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் சரும ஈரப்பதத்தை தக்க வைக்கும்.

வெயில்ல முகம் ரொம்ப வறண்டு போயிடுச்சா? 2 நிமிஷத்துல எப்படி சரி பண்றதுனு பாருங்க?
மாய்ஸ்சரைசர்

சருமம் வறண்டு போவதற்குள் மாய்ஸ்சரைசர் அப்ளே செய்யுங்கள்
உங்கள் சருமம் முழுவதும் வறண்டு போன பிறகு மாய்ஸ்சரைசர் அப்ளே செய்வது பலனை அளிக்காது. எனவே குளித்த உடன் மாய்ஸ்சரைசர் அப்ளே செய்து கொள்ளுங்கள். இது சருமம் முழுவதும் வறண்டு போவதை தடுக்கும்.
மேலே குறிப்பிட்டுள்ள சின்ன சின்ன டிப்ஸ்களே போதும் உங்கள் வறண்ட சருமத்தை அழகாக்கலாம்.bc42fe6305a7d44c224c8c385baf5dd0

source: boldsky.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button