​பொதுவானவை

திருமணம் இருவர் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்கள்

திருமணம் இருவர் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்கள்
திருமணம் என்பது ஒன்றும் அவ்வளவு பயத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயம் கிடையாது. வாழ்க்கையில் ஏற்படுத்தக் கூடிய ஒரு மாற்றம் மட்டுமே. கண்டிப்பாக தங்கள் வாழ்க்கையில் ஒவ்வொருவரும் கடந்து வரும் பாதையே இது.உங்கள் திருமணம் காதல் திருமணமோ அல்லது வீட்டில் பெரியவர்களால் பார்த்து செய்யப்படும் திருமணமோ, வரப்போகும் மாற்றங்கள் உறுதியே. திருமணம் பற்றிய கடுமையான உண்மை என்னவென்றால், மூன்று முடிச்சு போட்ட பிறகு உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றமே உண்டாகும்.உங்கள் வாழ்க்கை எப்படி மாறப் போகிறது என்பது உங்கள் கையில் தான் உள்ளது. திருமணம் பற்றிய சில கடுமையான உண்மைகளைப் பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.* உங்கள் அருகில் உங்கள் வாழ்க்கை துணை வந்து விட்டால், உங்களது சில பழைய பழக்கவழக்கங்களை நீங்கள் புதிதாக வந்துள்ள வாழ்க்கை துணைக்காக கைவிடவே வேண்டும். உங்கள் வாழ்க்கையை அந்த விசேஷ நபருக்காக சில தியாகங்களை செய்தாக வேண்டும் தானே.

* குடும்பம் பெரிதாகும் போது பொறுப்புகளும் அதிகரிக்கும். வீட்டு வேலைகளிலும், வெளி பொறுப்புகளிலும் கண்டிப்பாக நீங்கள் மாற்றத்தைக் காண்பீர்கள். இந்த பொறுப்புகளை நீங்கள் பகிர்ந்து கொள்ளும் நிலை ஏற்படும். அனைத்தையும் உங்கள் வாழ்க்கை துணையே செய்ய நீங்கள் எதிர்ப்பார்க்க முடியாது. நீங்களும் களத்தில் இறங்கி உங்கள் பங்களிப்பையும் அளிக்க வேண்டியிருக்கும்.

* குடும்பம் பெரிதாகும் போது பொறுப்புகளும் அதிகரிக்கும். வீட்டு வேலைகளிலும், வெளி பொறுப்புகளிலும் கண்டிப்பாக நீங்கள் மாற்றத்தைக் காண்பீர்கள். அனைத்தையும் உங்கள் வாழ்க்கை துணையே செய்ய நீங்கள் எதிர்ப்பார்க்க முடியாது.

* திருமணம் என்றாலே ஒரு அர்பணிப்பு உறவுக்குள் அடியெடுத்து வைப்பது தானே. வாழ்க்கையில் நிலைத்தன்மையை பெற்றிட உங்களது பழைய கேளிக்கை நிறைந்த வாழ்க்கையை கைவிட வேண்டி வரும். இதுப்போக உங்கள் வாழ்க்கை துணையை ஏமாற்றவும் முடியாது. ஆரோக்கியமான மற்றும் சந்தோஷமான வாழ்க்கையை தான் நீங்கள் எதிர்ப்பார்ப்பீர்கள்.

* திருமணம் என்றாலே பகிர்தல் உணர்வையும் கொண்டது தான். சிலவற்றை நீங்கள் பகிர்வீர்கள், சிலவற்றை உங்கள் வாழ்க்கை துணை பகிர்வார். இருவருமே ஒருவருக்கொருவர் வெளிப்படையாக இருக்க வேண்டும். அப்போது தான் உங்கள் திருமணம் வெற்றியடையும்.

* நீங்கள் வெளியில் சென்றிருக்கும் போது எங்கே இருப்பீர்கள் என உங்கள் வாழ்க்கை துணை உங்களிடம் கேட்டால், உங்கள் விஷயத்தில் அவர் மூக்கை நுழைக்கிறார் அல்லது தலையிடுகிறார் என கருதக்கூடாது. அது உங்கள் மீதுள்ள அக்கறையால் கேட்கப்படும் கேள்வி. உங்கள் மீது யாராவது அக்கறையுடன் இருக்கும் போது அம்மாதிரி கேள்வி கேட்பது இயல்பே.

இப்படி உங்கள் வாழ்க்கை துணை உங்களிடம் கேள்வி கேட்பாரோ, அதே போல் நீங்கே எங்கே செல்கிறீர்கள், எப்போது வருவீர்கள் என்ற விவரங்களை வீட்டில் தெரிவிக்க வேண்டியதும் உங்கள் பொறுப்பாகும். ஒரு வேளை நீங்கள் வீட்டிற்கு வர தாமதமானால், அதனை உங்கள் வாழ்க்கை துணையிடம் தெரிவிக்க வேண்டும். வீட்டில் தெரிவிக்காமல் இஷ்டத்திற்கு வருவதோ போவதோ இருக்க கூடாது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button