நிமைல் பற்றிய அறிமுகம். என்னை மிகவும் ஆச்சிரியமூட்டிய அறிமுகம்.

வேம்பு என்றதும் கசப்பு தான் நினைவிற்கு வரும். ஆனால், அதன் கசப்பு நம் வாழ்விற்கு இனிப்பு.

2013ஆம் ஆண்டு, கத்திரி வெயில். சுட்டெரிக்கும் மத்திய நேரம். முதுகில் இரண்டு நாளாக இருந்த ஒரு நமைச்சல் உச்சத்தை அடைய, பவுடரை நாடினேன். என் அம்மா வந்து பார்த்து திடுக்கிட்டாள். முதுகில் திட்டு திட்டாக சொறி வந்தது போல தடிப்புகள். அம்மாவிற்கோ அச்சம். என்ன செய்வது என்று புரியாமல், பக்கத்து வீட்டு அம்மாளிடம் புலம்பவே, அவள் உடனே வைத்தியம் சொன்னாள்.

“வேப்பிலையை அரைத்து முதுகில் தடவு. வேப்பங்கொழுந்து தரேன், சாப்பிடு! இரண்டே நாள்ல சரியாய் போய்டும்.”

நம்பிக்கை இல்லாமல் தான் செய்தேன், மருத்துவரிடம் செல்ல பயம். எனவே குருட்டுத்தனமாக தான் செய்தேன்.

இரண்டு வேளை தான் செய்தேன், மூன்றாம் வேளை, நமைச்சல், திட்டு திட்டுக்கள் அனைத்துமே காணோம்!!

எப்படி?

வேம்பு ஒரு கிருமி நாசினி. நமைச்சலை உண்டாக்கும் நுண்ணியிர் கிருமிகளை அழிப்பதோடு, மேலும் வராமல் தடுக்க வல்லது.

அன்றிலிருந்து நான் ஒரு வேம்பு ரசிகை.

வேம்பு ரசம், வேம்பு மாங்காய் பச்சடி இவை எல்லாம் என் வீட்டில் அடிக்கடி செய்யப்படும் பதார்த்தங்கள்.

இருப்பினும், வேம்பை தினந்தோறும் உபயோகிக்க இயல முடியவில்லை.

அதும், குழந்தை வந்த உடனே இது போன்றவற்றின் இடம் குறைந்து, ரசாயனங்களில் தான் ஆரோக்கியம் என்று எண்ண வைத்து விடுகின்றன ஊடகங்கள். நானும் அவ்வாறே எண்ணி இருந்தேன்.

இந்த நிலையில் மாம்ஸ்ப்ரெஸ்ஸோவும் நிமைலும் எனக்கு ஒரு வாய்ப்பு அளித்தன. நிமைல் மற்றிய அறிமுகம். என்னை மிகவும் ஆச்சிரியமூட்டிய அறிமுகம்.

என்னை போலவே ஒரு பத்து அம்மாக்கள் மற்றும் செல்ல பிராணிகளின் பிரியர்கள். தரை தான் எங்கள் உலகம்.

எந்த ஒரு வேலை எடுத்தாலும், தரையில் செய்வதே சுகம். சாப்பிடுவது, உறங்குவது, அமர்வது என்று தரையே நமக்கு நண்பன். அன்றியும், ஏதாவது ஒரு பொருள் கீழே விழுந்து விட்டால், பொறுக்கி எடுத்துச் செல்வதும் வழக்கமான ஒன்று.

அப்படிப்பட்ட தரையை நாம் நன்றாக கவனித்து கொள்கிறோமா? கண்டிப்பாக இல்லை.

தற்போது அங்காடிகளில் கிடைக்கும் தரை துடைப்பான்கள் அனைத்துமே ஓர் அமிலம் (குறைந்த பட்சம்) கொண்டவை; அன்றியும், அழுக்கை போக்கி, அமிலம் தரையில் தங்கிவிடும் அளவிற்கு அதிக அளவில் இருக்கும்.

குறிப்பாக குழந்தைகள் தரையில் இருக்கும் பொருட்கள் எடுத்து வாயில் போட்டுக் கொள்வர். தரையில் உருளும் களிப்பும், சந்தோஷமும் அளவில்லை. தத்தித் தத்தி நடக்கும் அந்த தளிர் நடை, தவழும் அந்த நீச்சல் நம்மை மயக்கும். அதை அமிலம் அரிக்க விடலாமா?

நிமைல், தூய்மையானது. வேம்பை கொண்டு செய்யப்பட்ட இது, மிகவும் பாதுகாப்பானது. மற்ற வேம்பு பொருட்களில் வேம்பின் வாசம் மட்டுமே இருக்கும். இது, முழுக்க முழுக்க வேம்பை கொண்டு செய்யப்பட்டது. கசக்குமே, வாசனை வருமே என்று எண்ண வேண்டாம், டெர்ப்பெனாய்ட்ஸ் மற்றும் கற்பூரம் நல்ல வாசனை தரும்.

இதில் என்ன வித்தயாசம் என்றால், கிருமிகளை அழிப்பதோடு, மேலும் வராமல் தடுக்கும். அமிலம் எதுமே இல்லாமல் இருப்பதால், தரைகளுக்கும் நன்மை, நமக்கும் நன்மை.

நிமைல் காய்ந்த அழுக்கையும் சிறந்த முறையில் போக்கும் வல்லமை கொண்டது.

கண்முன்னே அதை நான் பார்த்த உடன், நிஜமாகவே திருப்தி அடைந்தேன்.

இதை பற்றி அறிந்த பிறகு, என் மகன் தரையில் போட்டு தன் பொம்மையை தேய்த்து நான் வெளியே செல்வதை பார்த்து தவழ்ந்து வந்த போது பயமின்றி அணைத்து கொண்டேன்.

Leave a Reply