ஆரோக்கியம் குறிப்புகள்

எது சரியான முறை? உடல் எடை குறைப்பு

வளைவு நடைமேடையில் நடந்து வரும் சூப்பர் மாடல்களை போல அல்லது உங்களுக்கு விருப்பமான நடிகர்கள்/நடிகைகள் போல உடல் கட்டமைப்பு பெற விரும்புகிறீர்களா? அவை நிச்சயமாக முடியும். ஆனால் அதை அடைவதற்காக செல்லும் பாதை முறைப்படுத்தப்பட்ட ஒன்று. அவை நீண்ட தூரம் செல்லும் பயணம் போன்றது. அருகில் உள்ள கடைக்கு அல்லது அங்காடிகளுக்கு செல்லும் விரைவான சவாரி போன்றது அல்ல.

உங்களுக்கு விருப்பமான உடல் கட்டமைப்பை எடை குறைப்பு மூலம் அல்லது கொழுப்பு குறைப்பின் மூலம் பெறலாம். இப்பொழுது இவை இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை பற்றி விவரிக்கிறேன்.

fat1 1

உங்களுடைய உடல் எடை ஐந்து விஷயங்களை உள்ளடக்கியது. அவை தண்ணீர், தசைகளின் நிறை, எலும்புகளின் எடை, உடல் உறுப்புகளின் எடை மற்றும் கொழுப்பு. எலும்புகள் மற்றும் உடல் உறுப்புகளின் எடை என்பது நாம் அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ முடியாத ஒன்று. ஆனால் மற்ற மூன்று விஷயங்கள்தான், நாம் எவ்வாறு தோற்றமளிக்கும் என்பதை நிர்ணயிக்கிறது.

கலோரி குறைவான உணவு முறையை கடைபிடிப்பதன் மூலம், உடல் எடை குறைப்பை அடையலாம். அதாவது நாம் செலவழிக்கும் கலோரிகளை விட குறைவான கலோரிகள் கொண்ட உணவுகளை உண்பதன் மூலம் எடை குறைப்பை அடைய முடியும். எடுத்துக்காட்டாக, உங்களுடைய தினசரி கலோரி தேவை 1500 கலோரிகள் என்றால், நீங்கள் 1200 கலோரிகள் கொண்ட உணவை உட்கொள்ளும் போது, 300 கலோரிகளை குறைக்க முடியும். சிறிது நாட்களுக்குப் பிறகு, இந்தக் கலோரி குறைப்பு உங்களின் உடல் எடை குறைப்பிற்கு வழிவகுக்கும். இப்பொழுது இந்த உடல் எடை குறைப்பு, உடலில் உள்ள தண்ணீரின் எடை, தசைகளின் நிறை மற்றும் கொழுப்புகளை உள்ளடக்கியது. தசைகளில் ஏற்படும் இழப்பு, வலிமையை குறைத்து, அதன் தொடர்ச்சியாக இழந்த உடல் எடையை திரும்பவும் பெற வைக்கும் என்பது உண்மையான சூழ்நிலை அல்ல.

கொழுப்பு குறைப்பு தான் நம்முடைய குறிக்கோள். ஏனென்றால் அவை தான் நாம் விரும்பக்கூடிய உடல் கட்டமைப்பைப் பெற வழிவகுக்கும். கலோரி குறைவான உணவுகளை கடைபிடிக்க வேண்டும் என்ற அதே விதிதான், கொழுப்பு குறைப்பிலும் பின்பற்றப்படுகிறது. இவை இரண்டிற்குமே கலோரி குறைவான உணவு தேவை என்றால், இவை இரண்டிற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். வித்தியாசம் என்னவெனில், நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் உள்ள பெரு நுண்ணூட்டச் சத்துக்களின் (கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்பு) விகிதம் தான். இதில் உள்ள சரியான விகிதம்தான், நீங்கள் உடல் எடை குறைப்பை பின்பற்றுகிறீர்களா அல்லது கொழுப்பு குறைப்பை பின்பற்றுகிறீர்களா என்பதை தீர்மானிக்கும்.

பெரும்பான்மையான மக்கள் இணையதளத்தில் இருக்கக்கூடிய சீரற்ற உணவுமுறைகளான, ஜி.எம் உணவு முறை, டிடாக்ஸ் உணவு முறை, காய்கறி உணவு முறை, பழங்கள் உணவு முறை, பாம்பு உணவுமுறை (புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது), மற்றும் கீட்டோ உணவு முறை (நல்ல உணவு முறை, ஆனால் உணவு கட்டுப்பாட்டு நிபுணரின் மேற்பார்வையில் பின்பற்றுவது நல்லது) என பல உணவு முறைகளை பின்பற்றுகிறார்கள். கலோரி குறைவாக எடுத்துக் கொள்வதால், உடல் எடை குறைவதாக பலர் தங்களின் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்கள். ஆனால் தினசரி உணவு முறைக்கு வந்த உடன், இழந்த உடல் எடையை அல்லது அதைவிட அதிகமான உடல் எடையை பெருவதாக புகார்கள் வருகிறது.

உடலில் தசைகளின் நிறைய அதிகமாக இருக்கும்போது, கலோரிகளை உட்கொள்வதும் அதிகமாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தசைகளின் நிறைகளை குறைப்பதன் மூலம், உடல் எடை குறைப்பை பெறும்போது, அவை உடலுக்கு தேவைப்படும் கலோரிகளின் அளவையும் குறைத்துவிடும். இப்பொழுது தினசரி கலோரிகளின் தேவை குறைந்து விடுவதால், கலோரி குறைவான உணவு முறை என்பது இவற்றிற்கு பொருந்தாத ஒன்றாகிவிடும்.

இப்பொழுது நீங்கள் எடையைக் குறைக்க விரும்புகிறீர்களா அல்லது கொழுப்பை குறைக்க விரும்புகிறார்களா என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button