அழகு குறிப்புகள்

7 சரும பராமரிப்பு குறிப்புகள் சிறந்த பலனளிக்கும்

பத்திரிக்கைகளில் நீங்கள் படிக்கும் கடினமான சரும பராமரிப்பு நடைமுறைகள் உங்கள் சருமத்துக்கு பலனளிக்கும் என்று தெரிந்தாலும் ஆபீஸ், வீடு, மளிகை சாமான் ஷாப்பிங் மற்றும் ஜிம்மில் உடற்பயிற்சி என பிசியாக இருக்கும் உங்களுக்கு அதையெல்லாம் செய்து பார்க்க நேரம் ஏது?

இருங்கள், உடனே ஏமாற்றமடைய வேண்டாம்! உங்களை அழகாக பராமரிக்க சில எளிமையான வழிகளை, கிடைக்கும் சிறிது நேரத்தில் செய்தாலே போதும், பளிச்சென்ற தோற்றத்தை பெறலாம்.

MIMAGE48e373626fb9d447fff7

1. ஐஸ், ஐஸ் பேபி

முகத்துக்கு நொடிகளில் பளிச்சென்ற லுக்கை கொடுக்க மிக விரைவான வழி ஐஸ் ஆகும். முகத்துக்கு ஒரு குவிக் ஐஸ் பாத் கொடுக்கலாம் அல்லது ஐஸ் கட்டியை முகமெங்கும் தடவலாம். அது உங்களது சரும துவாரங்களை மூடச் செய்து விடும். இதனால் அழுக்கு மற்றும் பேக்டீரியாவால் சருமத்துக்குள் நுழைய முடியாது. ஐஸ் பாத் இரத்த ஓட்டத்தை அதிகரித்து முகத்துக்கு புத்துணர்வளித்து பளிச்சென்ற தோற்றத்தை உடனடியாக அளிக்கும்.

2. மாஸ்க் பயன்படுத்தி பொலிவான தோற்றம் பெறுக

வீட்டில் தயாரிக்கும் மாஸ்குகள் பொலிவான ஆரோக்கியமான சருமத்தை வழங்கிடும். காலம் காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் கடலை மாவு, மஞ்சள் மற்றும் தயிர் அடங்கிய மாஸ்குகள் புத்துணர்வு அளிக்கக் கூடியவை. அல்லது நீங்கள் ஓட் மீல் மாஸ்குகளையும் பயன்படுத்தலாம். ஓட் மீல் தயாரித்து அது சூடு ஆறியதும் முகத்தில் பூசி பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவிவிடலாம்.

பேக்கிங் சோடா மற்றும் தண்ணீரை பேஸ்ட் போல குழைத்து முகத்தில் பூசி அது காய்ந்ததும் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி விடலாம். இதுவும் கைமேல் பலனளிக்கும் குறிப்பாகும்.

3. க்ரீம்களின் சக்தி

நீங்கள் மேக்கப்பை பயன்படுத்தினாலும் பயன்படுத்தாவிட்டாலும் வெளியில் செல்லும் முன்னர் முகம் மற்றும் கழுத்தில் சன்ஸ்கிரீன் பயன்படுத்த மறக்காதீர்கள். நைட் கிரீம்களில் விட்டமின்ஸ் ஏ, சி, ஈ மற்றும் கே அடங்கியுள்ளதால் அவற்றை இரவு நேரங்களில் முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் பூசி வந்தால் சருமத்தில் சுருக்கம் மற்றும் கருவளையங்கள் நீங்கும். அது மட்டுமா? நீங்கள் தூங்கும் போது அது உங்களது சருமத்தில் செயல்படும்! டே கிரீம்கள் தினசரி நகர மாசு மற்றும் தூசுகளில் இருந்து உங்களது சருமத்தை பாதுகாக்க உதவிடும். இயற்கை உட்பொருட்களான ஆலோ வேரா போன்ற பொருட்கள் அடங்கிய கிரீம் உங்களது சருமத்துக்குள் ஆழமாக நுழைந்து ஊட்டமளிப்பதுடன் காற்றில் கலந்துள்ள நச்சுப்பொருட்களிடமிருந்து காக்கிறது.

4. யாருக்காவது டீ வேண்டுமா?

இல்லை, அழகான தோற்றம் பெற டீயை அதிகம் குடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் டீ பேகுகளை குளிர்ந்த நீரில் நனைத்து கண்களின் மேல் வைத்தால் கண்களில் வீக்கம் குறைந்து புத்துணர்ச்சி கிடைக்கும். கண்களின் மேல் குளிர்ச்சியான டீ பேக் வைப்பதனால் கண்களை சுற்றியுள்ள கருவளையங்கள் குறையும். மேலும் பருக்களின் மேல் அதனை வைத்தால் அழற்சி குறைந்து சீக்கிரம் அவை குணமடையும்.

5. மசாஜ் செய்து கவலைகளை குறையுங்கள்

கண்களின் கீழே கோடுகள், வீக்கம் மற்றும் பொலிவற்ற சருமம் ஆகியவை தினசரி உங்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை வெளிப்படுத்துகிறது. விரல்களால் லேசாக மசாஜ் செய்வதன் மூலம் இவற்றை சரி செய்யலாம். உங்களது மோதிர விரலை கொண்டு கண்களை சுற்றி கண்களின் உட்புறத்தில் இருந்து வெளிப்புறமாக சில முறை மசாஜ் செய்வதனால் இரத்த ஓட்டம் சீராகி கண்களை சுற்றியுள்ள கோடுகள் நீங்கும். ஒரு குவிக் ஃபேஷியல் மசாஜ் கொலோஜனை தூண்டி நீங்கள் சரும பராமரிப்புக்காக பயன்படுத்தும் பொருட்கள் சிறப்பாக செயல்பட உதவிடும்.

6. சுத்தமாக வைத்திடுங்கள்

உங்களது ஸ்கின் கேர் பொருட்களை கடைசியாக எப்போது சுத்தம் செய்தீர்கள் அல்லது மாற்றினீர்கள்? மேக்கப் பிரஷ்கள், ஹேர் ஸ்டைலிங் பொருட்கள், ரேஸர்கள் மற்றும் ட்ரிம்மர்களை மிக சுத்தமாக வைத்திருப்பது அவசியம். ஏனெனில் அவை உங்களது சென்சிடிவ் சருமத்துடன் நெருக்கமாக செயல்படக் கூடியவை. உங்களது முகத்தில் பயன்படுத்தும் பொருட்களை கவனமாக பாருங்கள். அவற்றில் காலாவதி தேதியையும் கவனியுங்கள். அவற்றில் பேக்டீரியா சேருவதை தவிர்க்க அடிக்கடி அவற்றை மாற்றுங்கள். ஏனெனில் அந்த பேக்டீரியா உங்களது சருமத்திலும் படிந்து விடக்கூடும்.

7. நல்ல உறக்கம் அவசியம்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button