ஆரோக்கிய உணவு

உங்களுக்கு இரத்த அழுத்தம் இருக்கா…? அப்ப இத படியுங்க…

உடலில் உள்ள அனைத்து பாகங்களும் சரியாக இயங்க இரத்த அழுத்தம் சீராக இருக்க வேண்டும். இரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது இருதய பிரச்னைகள் மற்றும் நரம்பு மண்டல பிரச்னைகளும் ஏற்படும். இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுவது நாம் சாப்பிடும் ஆரோக்கியமான உணவுகள் தான்.

குறிப்பாக கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கத்தினால் கூட இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.அதைக் கட்டுப்படுத்த சிறந்த உணவு தான் தர்பூசணி.

1759761479858773a5ef5d78e6ba7ced35fbe764c 1104687437

தர்பூசணி பார்ப்பதற்கும் சரி சுவைப்பதற்கும் சரி அத்தனை இனிமையானதாக இருக்கிறது. அதனால் தான் அதைச் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்கின்றனர்.

58 வயதில் இருக்கும் 14 பேரை வைத்துச் செய்யப்பட்ட சோதனையில், அவர்களுக்குச் சாப்பிட தர்பூசணி வழங்கப்பட்டது. சோதனையின் முடிவில் அவர்களின் இதய நோய் மற்றும் மெட்டபாலிக் நோய்களின் அபாயம் குறைவாகக் காணப்பட்டதோடு, உடலில் இரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்க உதவுகிறது.

அதே சமயம் தர்பூசணி சாப்பிடாதவர்களுக்கு இரத்த அழுத்தம் அதிகமாகவே இருந்துள்ளது. 50 வயதில் இருப்பவர்கள் தர்பூசணி சாப்பிடுவதால் தமணிகளின் செயல்பாடுகள் சீராகி இரத்த அழுத்த பிரச்னை இல்லாமல் இருக்கிறது. அதே போல் தர்பூசணியில் கலோரிகள் குறைவு. அதனால் உடல் எடையை குறைக்கவும், உடலில் நீரிழப்பு ஏற்படாமல் தடுக்கிறது என்பது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button