முகப் பராமரிப்பு

கொய்யாப்பழ தோலை இப்படி அப்ளை பண்ணுங்க… ஒரு வாரத்துல நீங்க கலராகணுமா?

கொய்யா’ தெரியாதவர்கள் இருக்க இயலாது. நம் நாட்டில் கொய்யாப்பழம் தாராளமாக கிடைக்கும். நோய் எதிர்ப்பு ஆற்றல், நல்ல ஜீரண சக்தி ஆகியவற்றை அளிக்கக்கூடிய வைட்டமின்களும் தாதுகளும் கொய்யாவில் அடங்கியுள்ளன. இது அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஆனால், உங்கள் சருமத்தை பளபளப்பாகவும் அழகாகவும் மாற்றக்கூடிய திறன் கொய்யாவுக்கு இருக்கிறது என்பது தெரியுமா?

கொய்யாவில் வைட்டமின் சி, பி மற்றும் ஏ ஆகியவை ஏராளமாக உள்ளன. இவை நம் உடலில் கொல்லேஜன் என்ற புரதத்தின் உற்பத்தியை அதிகரிக்கின்றன. இதனால், சூரியனின் கதிர்களால் சருமம் பாதிக்கப்படாமல் காக்கப்படுகிறது.

கொய்யா ஃபேஸ் பேக்

கொய்யாவை பயன்படுத்தி வீட்டிலேயே ஃபேஸ் பேக் தயாரித்து பூசிக் கொள்ளலாம். அதன் மூலம் உங்கள் முகம் புதுபொலிவு பெறும். சரும ஆரோக்கியம் மேம்படும்; அழகு கூடும்.

ஒளிரும் சருமம்

கொய்யாவின் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்களான ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள் அதிக அளவில் உள்ளன. இது உங்கள் சருமத்தை ஒளிரச் செய்யும். சருமத்தை தளர்த்தி மென்மையாக்கும். கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி ஃபேஸ் பேக் தயாரித்து வாரம் ஒருமுறை பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் தெரியும்

தேவையானவை:

தேன் – 1 தேக்கரண்டி
கொய்யா பழத்தின் தோல்

செய்முறை

முதலில் கொய்யாப்பழத்தின் தோலை சீவிக்கொள்ள வேண்டும். சீவப்பட்ட தோலை மிக்ஸியில் பசை போன்று அரைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பசையுடன் 1 தேக்கரண்டி அளவு தேனை சேர்த்து நன்கு கலக்கவேண்டும். இதை முகத்தில் பூசி 20 நிமிடம் அப்படியே விடவேண்டும். 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரால் முகம் கழுவவேண்டும்.

சரும வறட்சியை போக்க

கொய்யாவிலுள்ள நீர்ச்சத்து உங்கள் சருமத்திற்குத் தேவையான ஈரப்பதத்தை அளிப்பதோடு, தோலுக்கு மிருதுவான, ஆரோக்கியமான தோற்றத்தையும் அளிக்கிறது. கீழே தரப்பட்டுள்ள முறைப்படி ஃபேஸ் பேக் செய்து வாரம் இருமுறை பயன்படுத்தி வந்தால் சருமத்தின் வறட்சி நீங்கி, புதுப்பொலிவு கிடைக்கும்.

தேவையானவை:

ஓட்ஸ் – 1 மேசைக்கரண்டி
முட்டை மஞ்சள் கரு – 1
தேன் – 1 மேசைக்கரண்டி
கொய்யா – ½ பழம்

செய்முறை:

முதலில் கொய்யாவை சீவிக்கொள்ள வேண்டும். 1 மேசைக்கரண்டி ஓட்ஸ் எடுத்து பொடியாக்கிக் கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் ஓட்ஸ் பொடி எடுத்து, அதனுடன் 1 மேசைக்கரண்டி தேன், சீவப்பட்ட கொய்யா மற்றும் முட்டையின் மஞ்சள் கரு ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும். இதை முகத்தில் பூசிக்கொள்ளவும். 20 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி, முகத்தை மெதுவாக ஒத்தி உலர விடவும்.

சருமத்தை பளபளப்பாக்குவதற்கு

கொய்யாவிலுள்ள வைட்டமின்கள் உங்கள் சருமத்திற்கு புத்துணர்வு அளித்து பளபளப்பான தோற்றத்தை அளிக்கும். சோகையான தோற்றத்தை மாற்றி, பொலிவான தோற்றத்தை அளிக்கும். கீழ்க்காணும் வழிமுறைகளை பின்பற்றி பளபளப்பான சருமத்தை பெறுங்கள்.

தேவையானவை:

நீர் – 1 கப்
கொய்யா – 1

செய்முறை:

கொய்யாப்பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, சிறிது நீர் கலந்து பசைபோன்று தயாரிக்கவும். இதை முகத்தில் பூசிக்கொள்ளவும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும்.

தழும்புகள், பருக்களை போக்குவதற்கு

முகத்தில் பருக்களால் ஏற்பட்ட தழும்புகளை மாற்றுவதற்கும் முகப்பருக்களை ஆற்றுவதற்கும் கொய்யாப்பழத்திலுள்ள இயற்கை ஆற்றல் உதவுகிறது. உங்கள் முகத்திலுள்ள கரும்புள்ளிகளையும் பருக்களால் ஏற்பட்ட தழும்புகளையும் போக்குவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முறையை கையாளவும்.

தேவையானவை:

எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி
கொய்யா – 1
தேன் – 1 தேக்கரண்டி

செய்முறை:

முதலில் கொய்யாவை சீவி, பிழிந்து சாறு எடுக்கவும். அதனுடன் 1 தேக்கரண்டி தேன் மற்றும் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து நன்றாக கலந்து கொள்ளவும். இதை முகத்தில் பூசிக்கொள்ளவும். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். இந்த முறைகளை பின்பற்றி உங்கள் முகத்தை பொலிவாக்கிக் கொள்ளுங்கள்.7b6a8fbc83bcda55bfcbf6a9969f13a0

source: boldsky.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button