மருத்துவ குறிப்பு

ஆமணக்கு எண்ணெய்யில் உள்ள அற்புத பயன்கள்….!

ஆமணக்கெண்ணெய் பொதுவாக வயிற்றைச் சுத்தம் செய்வதற்காகவும், வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்றுவதற்காகவும் பயன்படுத்தப் படுகின்றது. ஆயுர்வேத மருத்துவத்தில் வாயுத் தொல்லைகளை விலக்க உதவுகின்றது.

ஆமணக்கு எண்ணெய், இலைகள், வேர், விதை, காய்கள் அத்தனையும் மருந்தாகப் பயன் தருகின்றன.

உடல் வெப்பத்தினால் கண்கள் சிவந்திருந்தால், சுத்தமான விளக்கெண்ணெய் 2 துளியை கண்களில் விட குணம் கிடைக்கும். ஆமணக்கு இலை, வாத நோயாளிகளுக்குச் சிறப்பான மருந்து. ஆமணக்கு இலையை, விளக்கெண்ணெயிலேயே லேசாக வதக்கி, மூட்டுகளின் வீக்கம், வலிக்கு ஒத்தடம் இட்டால் வலி நீங்கும்; வீக்கம் வடியும்.
பிரசவித்த பெண்ணுக்கு பால் கட்டிக்கொண்டாலோ, சரியாகப் பால் சுரக்கவில்லை என்றாலோ ஆமணக்கு இலையை விளக்கெண்ணெயில் வதக்கி, ஒத்தடம் இடலாம்.

கோழைக்கட்டு, இரைப்பு, இருமல் உள்ளவர்களுக்கு விளக்கெண்ணெய் 2 பங்கு, தேன் ஒரு பங்கு சேர்த்து உட்கொள்ள கொடுக்க வயிறு கழிந்து நோயின் தன்மை குறையும்.

மார்பகக் காம்புகளில் ஏற்படும் வெடிப்புகள் மற்றும் புண்கள் குணமாக ஆமணக்கு எண்ணெயைத் தூய்மையான, மெல்லிய பருத்தித் துணியில் ஊறவைத்து, அதை பாதிக்கப்பட்ட இடத்தில் பற்றாகப் போட்டுவர வேண்டும்.

ஆமணக்கு இலைகள எடுத்து சின்னதா நறுக்கி, விளக்கெண்ணெய் விட்டு வதக்கி, சூட்டுடன் வலியுள்ள முழங்கால்லயும் (arthritis), வீக்கமுள்ள இடத்திலயும் ஒத்தடமிடலாம்.
மலச்சிக்கல், பெண்களுக்கு மாதவிடாய் காலத்துல வர்ற அடிவயிறு வலி… இதுமாதிரி பிரச்சனைக்கெல்லாம் அடிவயிற்றுல விளக்கெண்ணய தடவி, அதன்மேல் வதக்கிய ஆமணக்கு இலைகளை வைத்து கட்டி வந்தா நல்ல பலன் கிடைக்கும்.

ஆமணக்கு இலையப் போட்டு காய்ச்சிய வெந்நீர வச்சு மார்பகங்கள்ல ஒத்தடம் தந்து, ஆமணக்கு இலைய வதக்கி மார்பில் கட்டிவர, பெண்களுக்கு பால் சுரப்பு அதிகரிக்கும்.1558417659 42

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button