முகப் பராமரிப்பு

மருக்கள் உங்கள் அழகை அலங்கோலம் ஆக்குகிறதா? அப்ப இத படியுங்க…

நமது உடல் உறுப்புகள் அனைத்துமே நாம் விரும்புகிற வண்ணம் இருப்பதில்லை. அனைவருக்கும் ஏதாகிலும் ஒரு குறைபாடு காணப்படும். இந்நிலையில், அதிகமானோருக்கு அவர்களது கழுத்து, முகம், கை, கால் போன்ற பகுதிகளில் மரு காணப்படும்.

தற்போது இந்த பதிவில் நமது உடலில் உள்ள மருக்கள் உதிர்வதற்கான சில வழிமுறைகள் பற்றி பார்ப்போம்.

இஞ்சி

சிறிதளவு இஞ்சி துண்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அந்த இஞ்சி தங்களை நன்கு தட்டி கொள்ள வேண்டும் அவ்வாறு தட்டும் போது, அதில் இருந்து வருகிற சாற்றினை எடுத்து, தொடர்ந்து 2 வாரங்களுக்கு மருவில் பூசி வந்தால், அது தானாகவே காய்ந்து உதிர்ந்துவிடும்.

வெங்காயம்

மருக்களை உத்திர வைப்பதில் வெங்காயம் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. வெங்காயத்தை முதல் நாள் இரவே நீரில் ஊற வைத்து, அதனை எடுத்து மை போல் அரைத்து, அதனை மரு உள்ள இடத்தில வைத்து ஊற வைத்து, அதனை வெந்நீரால் கழுவினால் மரு உதிர்ந்து விடும்.

வெள்ளை பூண்டு

வெள்ளை பூண்டு சாற்றினை எடுத்து, மரு உள்ள இடத்தில ஒரு நாளைக்கு மூன்று முறை தடவி வந்தால், மருக்கள் காய்ந்து தானாக உதிர்ந்து விடும்.

சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகரை காட்டனில் நனைத்து, மரு உள்ள இடத்தில் ஒற்றி ஒத்தடம் கொடுத்து வந்தால், மரு தொல்லையில் இருந்து விடுதலை பெறலாம்.

25114733375872605cb6a013218a1fdbbb48d0313 124659668

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button