மருத்துவ குறிப்பு

குழந்தை பிறந்தவுடன் ஏன் பெண்கள் குண்டு ஆகிறார்கள் தெரியுமா?அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்…

வயிற்றில் குழந்தை இருக்கும்போது தாய்க்கும் குழந்தைக்கும் என்று இரண்டு சாப்பாடு உண்ண வேண்டும் என்று கர்ப்பிணியை ஆளாளுக்கு பாடாய்படுத்தி நிறைய சாப்பிட வைப்பார்கள். மேலும் கர்ப்பம் அடையும்போது குண்டாக ஆனால்தான் குழந்தையும் குண்டாக இருக்கும் என்று நம்புவார்கள். அதனால், வழக்கமான எடையைக் காட்டிலும் கர்ப்ப காலத்தில் 10 முதல் 12 கிலோ வரை ஒரு பெண்ணுக்கு எடை அதிகரிப்பது இயல்புதான். ஆனால், குழந்தை பிறந்த மூன்று மாதங்களில் கிட்டத்தட்ட எட்டு கிலோ வரை உடல் எடை தானாக குறைய வேண்டும்.

ஆனால், அப்படி நடப்பதற்கு யாரும் விடுவதில்லை. பால் கொடுக்கும் பெண் நிறைய சாப்பிட வேண்டும் என்று பெரியவர்கள் மீண்டும் நிறைய உணவுகளை கொடுப்பார்கள். மேலும் சத்தான உணவு வேண்டும் என்று கொழுப்பு உணவுகளைக் கொடுப்பார்கள்.

குழந்தை பெற்றவர்கள் மருத்துவர் ஆலோசனையுடன் எளிய உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும். ஆனால், அதற்கும் நம் சமூகம் அனுமதிப்பதில்லை. பச்சை உடம்பு என்று ஆடாமல் அசையாமல் வைத்திருப்பார்கள். இதுதவிர தைராய்டு சுரப்புகளில் குறைபாடு, ஹார்மோன் சமன்பாட்டில் பாதிப்பு, கர்ப்பகாலச் சர்க்கரை நோய் போன்ற சில காரணங்களாலும் உடல் பருமன் ஏற்படலாம்.

ஆனால் சமச்சீர் உணவு, மிதமான உடற்பயிற்சி, வாழ்க்கைமுறை மாற்றம் ஆகியவற்றின் மூலம் கர்ப்பக் காலத்தில் அதிகரித்த கூடுதல் உடல் எடையை மூன்றே மாதங்களில் குறைத்துவிட முடியும் என்பதுதான் உண்மை. மூன்று மாதங்களில் உடல் எடை குறையவில்லை என்றால் உடனடியாக மருத்துவரை சந்தியுங்கள். ஒன்றிரண்டு வருடங்கள் கழித்து மருத்துவரை சந்திப்பதால் எந்த பிரயோஜனமும் இருக்காது என்பதைப் பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும்.news 5227 1

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button