தலைமுடி சிகிச்சை

சூப்பர் டிப்ஸ் கூந்தல் உதிர்வை கட்டுக்குள் வைக்கும் உணவு வகைகள்!

நல்ல ஆரோக்யமான, நீளமான கூந்தலை பெற‌ யாருக்குதான் பிடிக்காது. ஆனால் கெமிக்கல் நிறைந்த ஷாம்புக்கள் மற்றும் முறையற்ற வாழ்க்கை முறைகளால் அதிகப்படியான தலைமுடி பிரச்னையை சந்திக்க நேரிடுகிறது. பின்வரும் உணவு பொருள்களை பயன்படுத்துவதன் மூலம் முடி உதிர்வு பிரச்னையை கட்டுக்குள் கொண்டு வர இயலும்.

முட்டை மாஸ்க்:

முட்டைகள் அதிகளவு புரதம் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களை கொண்டுள்ளது.

முட்டையை தலைமுடிக்கு பயன்படுத்துவதால் முடி உதிர்தல் பிரச்னை தீர்வதுடன், முடி மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கும். முட்டையை எண்ணெய் அல்லது தயிருடன் கலந்து தலை முடியின் மீது மாஸ்க் போல போட வேண்டும்.

தேங்காய் எண்ணெய் :

தேங்காய் எண்ணெய் அதிகப்படியான நல்ல கொழுப்புக்களை கொண்டுள்ளது. இந்த எண்ணெயை தலைக்கு தேய்த்து வந்தால் தலைமுடிக்கு தேவையான சத்துக்கள் கிடைப்ப‌துடன் முடி உதிர்தலும் விரைவில் கட்டுக்குள் வரும்.

தயிர்:

தயிரில் பாலை விட அதிகமான புரதங்களும் சத்துக்களும் நிறைந்துள்ளது. தயிரை தலைமுடிக்கு மாஸ்க் போன்று போட்டு பின்னர் முடியை அலசுவதனால், முடி நல்ல வளர்ச்சியை பெறுவதுடன் மிருதுவாகவும் இருக்க தயிர் உதவும்.

5. பால்:

பாலில் உள்ள புரதம் முடிக்கு நன்மை தரக்கூடியது, இது முடியை மென்மையானதாகவும், பளபளப்பானதாகவும் வைத்துக்கொள்ள உதவும். வெதுவெதுப்பான பாலை கொண்டு முடிய அலசுவதனால் முடிக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். பாதாம் பால், சோயா பால் அல்லது தேங்காய் பால் போன்ற பால் வகைகளையும் பயன்படுத்தலாம்.

6. தேன்:

தேன் மிகவும் அடர்த்தியான ஒட்டும்தன்மை கொண்ட பொருளாக இருந்தாலும் இதனை தலைமுடிக்கு பயன்படுத்தினால் பல நன்மைகளை பெற முடியும். இது முடி வரண்டு போகாமல் தடுப்பதுடன் முடியை ஈரப்பதமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. தேனுடன் பால், எலுமிச்சை சாறு அல்லது எண்ணெயையும் கலந்து தலைமுடிக்கு பயன்படுத்தலாம்.

மேல் சொன்ன வீட்டு மருத்துவத்தை வாரத்தில் இரண்டு முறை பயன்படுத்துவதன் மூலம் கருமையான, ஆரோக்யமான தலை முடியை பெற முடியும்.

1323537032ddbda142aca8260f925b7740d162f1f 805689805

newstm.in

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button