ஆரோக்கிய உணவு

ருசியான வித்தியாசமான தேங்காய் பிஷ் பிரை!! சுவையாக செய்வது எப்படி!!

தேவையான பொருட்கள்:

வஞ்சிர மீன் – அரை கிலோ,
எலுமிச்சை சாறு – 3 ஸ்பூன்
சோளமாவு – 4 ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
பச்சை மிளகாய் – 3
எலுமிச்சை பழம் – 1
பூண்டு விழுது – அரை ஸ்பூன்
இஞ்சி – சிறிய துண்டு
மிளகு பொடி – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
தேங்காய் துருவல் – தேவையான அளவு
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்.

செய்முறை:

கறிவேப்பிலை, இஞ்சி, கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாயை மிக்ஸியில் இட்டு சற்று கொரகொரப்பாக இருக்குமாறு அரைத்து கொள்ளவும்.

அந்த அரைத்த விழுதோடு எலுமிச்சை சாறு, மிளகாய்த்தூள், பூண்டு விழுது, மிளகு தூள் மற்றும் சோளமாவு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.

கலக்கிய இந்த மசாலாவில் மீனை முக்கி பிரட்டி, பின்னர் 4 மணி நேரம் பிரிட்ஜ் பீரீசரில் எடுத்து வைக்கவும். பின்னர் அதனை எடுத்து தேங்காய் துருவலில் போட்டு நன்றாக பிரட்டி எடுக்கவும்.

தோசைக்கல்லை அடுப்பில் இட்டு, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மீனை போட்டு மிதமான தீயில் அடுப்பை வைத்து பொரித்து எடுக்கவும். வித்தியாசமான சுவையில் தேங்காய் பிஷ் பிரை தயார்.

244867634d0d071203f5e81ad87b1c30d1541e28a 1834470125

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button