மருத்துவ குறிப்பு

சிறுநீரக பாதிப்புடையோர் சாப்பிடக் கூடியவை

சிறுநீரக பாதிப்புடையோர் சாப்பிடக் கூடியவை
சிறுநீரக பாதிப்புடையோருக்கு சில பொதுவான பொருட்கள் கீழே கூறப்பட்டிருந்தாலும் அவரவர் மருத்துவரையும் ஆலோசனை பெற்று உண்ண வேண்டும்.* சிகப்பு குடை மிளகாயில்  கப் – 1 மி.கி. சோடியம் 85 மி.கி. பொட்டாசியம் 10 மி.கி. பாஸ்பரஸ் நிறைந்த வைட்டமின் சி, பி6 போலிக் ஆசிட், நார்சத்து பாஸ்பரஸ் சத்து குறைந்தது. இதிலுள்ள கோபைன் புற்று நோயிலிருந்து காக்கும்.* முட்டை கோஸ் வேக வைத்தது.  கப் – 6 மி.கி. சோடியம், 60 மி.கி. பொட்டாசியம், 9 மி.கி. பாஸ்பரஸ் கொண்டது. இதிலுள்ள பைடோகெமிகல் புற்று நோய், இருதய நோய் இவற்றிலிருந்தும் காக்கும்.* வைட்டமின் கே, சி, பி6, போலிக் ஆசிட், நார்சத்து கொண்டது.

* காலிப்பிளவர் வேக வைத்தது.  கப் – 9 மி.கி. சோடியம், 88 மி.கி. பொட்டாசியம், 20 மி.கி. பாஸ்பரஸ் அதிக வைட்டமின் சி சத்து, போலேட், நார்சத்து கொண்டது. கல்லீரலையும் வெகுவாய் பாதுகாக்கும்.

* பூண்டு 1 பல் – 1 மி.கி சோடியம், 12 மி.கி. பொட்டாசியம், 4 மி.கி. பாஸ்பரஸ்.

* வெங்காயம்  கப் – 3 மி.கி. சோடியம், 116 மி.கி. பொட்டாசியம், 3 மி.கி. பாஸ்பரஸ் குரோமியம் சத்து கொண்டது.

* ஆப்பிள் 1 = 0 சோடியம், 158 மி.கி. பொட்டாசியம், 10 மி.கி. பாஸ்பரஸ் கொழுப்பை கட்டுப்படுத்தும், மலச்சிக்கலை நீக்கும். இருதயத்தைக் காக்கும். புற்று நோய்க்கு எதிர்ப்பு, நார்சத்து கொண்டது.

* முட்டையின் வெள்ளைக் கரு: 2 முட்டையின் வெள்ளைக் கரு – 7 கி புரதம், 110 மி.கி. சோடியம், 108 மி.கி. பொட்டாசியம், 10 மி.கி. பாஸ்பரஸ் கொண்டது.

* ஆலிவ் எண்ணெய் 1 டீஸ்பூன் – 1 மி.கி. சோடியத்திற்கும் குறைவு, 1 மி.கி. பொட்டாசியத்திற்கும் குறைவு, 0 மி.கி. பாஸ்பரஸ் கொண்டது.

சிறுநீர் குழாயில் கிருமி தாக்குதல் :

அதிக வலியுடன் சிறுநீர் செல்லுதல், அடிக்கடி சிறுநீர் செல்ல வேண்டிய அவசரம், ஜுரம், பக்கவாட்டில் வலி போன்றவை இதன் அறிகுறிகள். கிருமிகளின் தாக்குதலால் ஏற்படுபவை இவை. ஆண்களை விட பெண்களுக்கே இந்த தாக்குதல் அதிகமாக இருக்கும். சிறுவர்களுக்கு இந்த தாக்குதல் ஜுரமாக அநேகமாக வெளிப்படும்.

முதியோர்களுக்கு சிறுநீர் வெளிப்போக்கு கட்டுப்பாடின்மை, குழப்பம், சோர்வு போன்ற அறிகுறிகளைக் காட்டும். கர்ப்பகாலத்தில், சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த தாக்குதல் ஏற்பட்டால் கூடுதல் மருத்துவ கவனம் தேவை. சிறுநீர் வெளியேறிய பிறகு அவ்விடத்தை தண்ணீர் கொண்டு சுத்தம் செல்வது சிறந்த பாதுகாப்பை அளிக்கும்.

உள்ளாடை பருத்தியினால் ஆனதாக இருக்க வேண்டும். அன்றாடம் இரண்டு வேளை உள்ளாடையை மாற்ற வேண்டும். பெண்கள் மாத விலக்கு காலங்களில் கூடுதல் சுகாதார கவனம் அளிக்க வேண்டும்.

Related posts

ஆரோக்கியத்தை பாதிக்கும் ஊறுகாய்

nathan

உள்காயம் அறிவது எப்படி?

nathan

தெரிஞ்சிக்கங்க…உங்கள் குழந்தை எப்போது தண்ணீர் குடிக்க ஆரம்பிக்கலாம்?

nathan

உங்கள் குழந்தை பொது இடங்களில் வித்தியாசமாக நடந்து கொள்கிறார்களா?

nathan

ரத்தசோகையைப் போக்க…!

nathan

முதுகுத்தண்டு முத்திரை விரல்கள் செய்யும் விந்தை!

nathan

பெண்களுக்கு தொங்கும் மார்பகங்கள்: சரி செய்ய எளிய வழி

nathan

பெண்ணுறுப்பில் பயங்கர வலி, இந்த செயலை தவிர்க்க வேண்டும்: மகப்பேறு மருத்துவர் எச்சரிக்கை!

nathan

ஒருதலை காதலர்கள் உருவாகாமல் தடுப்பது எப்படி? பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan