கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

அட்டகாச ‘ஹேர் மாஸ்க்குகள் கூந்தலை பொலிவடைய…

ஹேர் மாஸ்க் என்பது என்ன?

பெரும்பாலான மக்கள் உலர் சருமம், முகப்பரு, உலர் கன்னம் மற்றும் தடுப்புகளுக்கு மாஸ்க் அப்ளை செய்து, அந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணுகின்றனர். அதேபோல், வறண்ட முடி, எண்ணெய் சிக்கு, முடி உதிர்தல் ஆகியவற்றிற்கு ஹேர் மாஸ்க் செய்து தீர்வு காண முடியும் என்று கூந்தல் வல்லுநர்கள் உறுதியளிக்கின்றனர்.

yuiyiipo

முதலாவதாக, உங்கள் உச்சந்தலையில் தொடங்கி, உங்கள் கூந்தலை மதிப்பீடு செய்ய வேண்டும். வறண்ட கூந்தலா?, க்ரீஸ், எளிதில் அரிப்பு ஏற்படுகிறதா? என்று பார்க்க வேண்டும். பின்னர், எந்தமாதிரியான மாஸ்க் பொருந்தும் என்று முடிவு செய்ய வேண்டும். பெரும்பாலான பெண்களுக்கு நீளமான கூந்தல் இருக்கும். அவர்கள் இரண்டு நாட்கள் கூந்தலை அலசவில்லை என்றால், அந்த வேர்களை கண்டுபிடித்துவிடலாம். ஆனால், நடுப்பகுதி கூந்தல் நீளமாக உறைந்திருக்கும். கூந்தலின் முனைகள் வறண்டு காணப்படும். எனவே, உங்கள் உச்சந்தலை தோலிலிருந்து கூந்தலை எடுத்து கூந்தலை ஆராய்ந்து தீர்வு காணலாம். உண்மையிலே உங்கள் முகமுடிக்கு பயன்படுத்தும் பொருள்களை சாப்பிட முடியும். எனவே, சமையல் அறை பொருள்களிலிந்தே ஹேர் மாஸ்க் தயாரிக்கலாம்.

உலர் உச்சந்தலை

பப்பாளி பழம் உடலுக்கு ஒரு சூப்பர்ஃபுட் மட்டுமல்ல, உங்கள் தலைமுடிக்கும் சிறந்த ஊட்டச்சத்து. இது உங்கள் உச்சந்தலையின் இயற்கை எண்ணெய்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. இதை எளிமையாக பயன்படுத்தலாம். இரட்டை ஈரப்பதம் கிடைக்கும். தேன் மற்றும் பழுத்த பப்பாளி இரண்டையும் சேர்த்து தலையில் மாஸ்க் செய்யவும். உங்கள் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான ஒரு இயற்கை வழி. இந்த மாஸ்க் இந்துலேகா பிரிங்கா எண்ணெய் துணையுடனும் செய்யலாம்.

எண்ணெய் பிசுபிசுப்பு உச்சந்தலை

புல்லர் எர்த் அல்லது மருதாணி கலந்த ஒரு சிறந்த களிமண் மாஸ்க் தயாரிக்கலாம். இந்த மாஸ்க்கை எளிதாக செய்ய நீங்கள் எப்போதும் பயன்படுத்தும் எலுமிச்சை அல்லது ஆரஞ்சு சாறு ஒரு சில துளிகள் சேர்க்க மற்றும் தண்ணீர் கலந்து மாஸ்க்கை முடிக்கவம். இது குளிர்விக்கும் மாஸ்க் என்பதால் வெப்பத்தை தடுக்கும்.

பொடுகு மற்றும் சொரசொரப்பான உச்சந்தலை

நாம் அனைத்து நேரங்களிலும் பயன்படுத்தும் தேன் மற்றும் தேங்காய் எண்ணெய் கல்ந்து உச்சந்தலையில் தேய்க்கலாம். இந்தக் கலவை எளிதாக உச்சந்தலை கூந்தலால் உரிஞ்சப்பட்டுவிடும். அதன்பின், சிறிது நேரம் மசாஜ் செய்தால், அதன்மூலம் சூடு ஏற்பட்டு, உச்சந்தலையில் உள்ள ஈரப்பதத்தை தடுக்கிறது. தேன் மிகப்பெரிய மருத்துவ குணம் கொண்ட பொருள். இது, பொடு ஏற்படுவதை தடுக்கிறது. அரிப்பை அகற்றுகிறது. ஆன்டிசெப்டிக் பண்புகள் அதிகம் இருப்பதால் மேற்சொன்ன அனைத்தையும் நீங்க வாய்ப்பளிக்கிறது. அதேபோல், இந்துலேகா இயற்கை எண்ணெய்யை இணைத்துக்கொண்டால், கூந்தலுக்கு அதிக பாதுகாப்பு கிடைக்கிறது.

வறண்ட மற்றும் நடுத்தர நீள கூந்தல்

வறண்ட மற்றும் குட்டையான கூந்தலை சரிசெய்ய வாழைப்பழம் உதவி செய்கிறது. வாழைப்பழத்தில் கூந்தலுக்கு தேவையான அதிக நன்மைகள் உள்ளன. கூந்தல் சேதமடையாமல் இருப்பதற்கு வைட்டமின் ஙி6 மற்றும் பயோட்டின் ஈரப்பதம் தேவை. அதற்கு 1 அல்லது 2 பழுத்த வாழைப்பழங்கள் (முடி நீளம் பொறுத்து) தேன் -3 தேக்கரண்டி கலந்து மாஸ்க் தயாரிக்க வேண்டும். தேன் மென்மையாக மென்மையாகவும், கூடுதல் ஈரப்பதம் கிடைக்கவும் உதவுகிறது.

கூந்தல் முறிவுக்கு முற்றுப்புள்ளி

முட்டை மாஸ்க் பயன்படுத்தலாம். அதாவது, முட்டை மஞ்சள் கருவை உங்களின் கூந்தலில் அப்ளை செய்யவும். இதோடு பாதாம் எண்ணெய் கல்ந்து அப்ளை செய்தால், கூந்தல் முனை முறிவை தடுக்கும். காரணம், பாதாம் எண்ணெய் மற்றும் முட்டையின் மஞ்சள்கரு கூந்தலை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும்.

மேற்கண்ட மாஸ்க் வகைகளை 30 நிமிடங்களுக்கு மேலாக பயன்படுத்த வேண்டும். கூந்தலை அலசுவதற்கு சல்பேட் இல்லாத ஷாம்பு பயன்படுத்தவேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button