ஆரோக்கியம் குறிப்புகள்

ஏன் சொல்கிறார்கள் தெரியுமா? விரும்பி சாப்பிடும் பரோட்டா சாப்பிட கூடாதென

உணவகங்களில் பரோட்டா இல்லாத உணவகமே இருப்பதில்லை.

பரோட்டா சாப்பிடுவது உடல் நலத்திற்கு தீங்கு என்ற சொன்னாலும் பலரும் இதனை சாப்பிட்டு தான் வருகிறார்கள். பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை தொடங்குகிறது. பரோட்டா மட்டும் இல்லாது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

பொதுவாக கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதனுடன் ‘Benzoyl peroxide’ என்னும் ரசாயனம் கொண்டு வெண்மையாகுகிறார்கள், அதுதான் மைதாமாவாகும்.

Benzoyl peroxide ரசாயனம் என்பது நாம் தலை முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயனம் ஆகும். இந்த ராசாயனம் மாவில் உள்ள புரோட்டின் உடன் சேர்ந்து நீரழிவு நோய் ஏற்படுவதற்கு காரணமாக அமைகிறது.

ui7885yjukukமேலும் இந்த மைதா மாவில் பல பொருட்களும் சேர்க்கப்படுகிறது. இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது. மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா ஜீரணத்திற்க்கு உகந்தது அல்ல. மைதாவில் நார்சத்து கிடையாது, நார்சத்து இல்லா உணவு நம் ஜீரண சக்தியை குறைத்து விடும்.

குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது. எனவே குழந்தைகளுக்கு மைதாவினால் செய்த தின்பண்டங்களை கொடுக்காமல் இருப்பது நல்லது.

ஐரோப், சீனா, லண்டன் போன்ற நாடுகளில் இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன. மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநீரக கல், இருதய கோளாறு, நீரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு.

நமக்கு ஆரோக்கியம் கிடைக்க வேண்டுமென்றால் நம் நாட்டின் பாரம்பரிய உணவுப்பொருட்களான கேழ்வரகு, கம்பு, சிறுதானிய உணவுகளை சாப்பிட்டுவந்தால் நம்மை எந்தவித நோய்களும் அண்டாது. எனவே ஆரோக்கியமற்ற பரோட்டாவை தவிர்ப்போம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button