ருசியான அவல் போண்டா செய்வது எப்படி?!

தேவையான பொருட்கள்:

கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு,
தட்டை அவல் – ஒரு கப்,
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு,
உருளைக்கிழங்கு – ஒன்று,
பச்சை மிளகாய் – 3,
தயிர் – 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு, சீரகம், பெருங்காயத்தூள் – தேவையான அளவு.

செய்முறை :

அவலை சுத்தமாக கழுவி நன்றாக ஊறவைக்கவும்.
உருளைக்கிழங்கை கொழகொழப்பாக வேக வைத்து மசித்து எடுத்துக்கொள்ளவும்.

பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லியை பொடி,பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த அவலை தண்ணீரை நன்றாக வடித்துவிட்டு போடவும், அதனுடன் உருளைக்கிழங்கு, மிளகாய், கொத்தமல்லி, உப்பு, தயிர், சீரகம், பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து, தண்ணீர் தெளித்து, நன்கு பிசைந்து எடுத்துக்கொள்ளவும்.

இந்த மாவை போண்டா சைஸில் உருண்டைகளாக பிடித்து அடுப்பில் காயவைத்த எண்ணெயில் பொரித்து எடுத்து பரிமாறினால், சுவையான அவல் போண்டா தயார்.

Leave a Reply