சூப்பர் டிப்ஸ் ! உடல் எடையை விரைவாக குறைக்க இதோடு இதையெல்லாம் சேர்த்து சாப்பிடுங்கள்!

மனிதர்கள் வாழும் காலம் வரை ஆரோக்கியமாக வாழவே விரும்புவார்கள். ஆரோக்கிமாக வாழ வேண்டுமெனில் அதற்கு முக்கியம் உடல் எடையை சரியாக பராமரிப்பது தான்.

மேலும் நாம் சாப்பிடும் உணவுகளை பொருத்தே நம் உடல் எடை அமையும். அதிக உடல் எடையை குறைக்கவும், சரியான எடையை பராமரிக்கவும் செய்ய வேண்டிய சில குறிப்புகளைப் பற்றி பார்ப்போம்.
அன்னாச்சி மற்றும் எலுமிச்சை

அன்னாச்சியில் மிகவும் குறைவான கலோரிகளே உள்ளதால் இதனுடன் எலுமிச்சை சேர்த்து சாப்பிடும் போது செரிமான மண்டலத்தை சீராக வைத்து உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைக்க உதவுகின்றன.

தக்காளி மற்றும் ஆலிவ் ஆயில்

தக்காளியில் உள்ள லிகோபேன் என்கிற ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ்கள் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இதனுடன் சிறீது ஆலிவ் ஆயில் சேர்த்து பயன்படுத்தினால் இந்த கலவை உங்களுக்கு அதிக பயனை தரும்.
உருளைக்கிழங்கு மற்றும் மிளகு

உருளைக்கிழங்கில் மிளகை அதிகமாக தூவி பயன்படுத்தினால் எளிதாக உடல் எடையை குறைக்க முடியும் என புதுவித ஆராய்ச்சி ஒன்று கண்டறிந்துள்ளது.

முட்டை மற்றும் அவகேடோ

முட்டையும், அவகேடோ பழமும் உடல் எடையை குறைக்க இவை இரண்டும் சிறந்த உணவாகும். மேலும் இவற்றை தினமும் சாப்பிடுவதால் மிக எளிதாக உடல் எடையை குறைத்து விடலாம்.
பாதாம் மற்றும் யோகார்ட்

பாதாம் மற்றும் யோகார்ட்டையும் சேர்த்து சாப்பிடுவதால் உடல் எடை சிக்கீரமாகவே குறைந்து விடுகிறதாம். மேலும், இவற்றை தொடர்ந்து சாப்பிடுவதால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறையுமாம்.

காபி மற்றும் இலவங்கம்

தினமும் காலையில் காபியில் சிறிது இலவங்க பொடியை கலந்து சாப்பிடுவதால் உங்களின் உடல் எடை உடனே குறைந்து விடும்.
தேன் மற்றும் எலுமிச்சை

தேனையையும் எலுமிச்சையும் சேர்த்து சாப்பிட்டால் உடனடியாக இதன் பலனை நம்மால் பார்க்க முடியும். அத்துடன் உடலும் நாள் முழுக்க சுறுசுறுப்பாக இருக்கும்.

இஞ்சி, ஆப்பிள், மற்றும் முளைக்கீரை

இஞ்சி, ஆப்பிள், மற்றும் முளைக்கீரை ஆகிய மூன்றையும் சேர்த்து சாப்பிடுவதால் மிக விரைவிலே உடல் எடையை குறைத்து விடலாம்.

Leave a Reply