உங்களுக்கு தெரியுமா பொடுகைப் போக்கும் கல் உப்பு!

இன்றைய பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளில் ஒன்று தான் முடி உதிர்வு மற்றும் பொடுகு தொல்லை. இதற்கு இன்று எத்தனையோ ஷாம்புகள், செயற்கை மருந்து பொருட்கள் இருந்தாலும் இயற்கை முறையிலான முயற்சியே தீர்வை தருகிறது என்று கூறப்படுகின்றது. அந்த வகையில் பொடுகைப் போக்க கல் உப்பு பெரிதும் உதவுகிறது. அது எப்படி என்று பார்ப்போம்:

தேவையான பொருட்கள்: கல் உப்பு – 2 தேக்கரண்டி, ஆலிவ் எண்ணெய் – 1 தேக்கரண்டி, எலுமிச்சைச் சாறு – அரை தேக்கரண்டி, கண்டிஷனர் – 1 தேக்கரண்டி.

செய்முறை : ஒரு கிண்ணத்தில் கல் உப்பு மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்க்கவும். இரண்டையும் ஒன்றாகக் கலக்கவும். இந்தக் கலவையுடன் சிறிதளவு எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

இந்தக் கலவையுடன் கண்டிஷனர் சேர்த்து, எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கவும். பின்னர் உங்கள் உச்சந்தலையை ஈரமாக்கிக் கொள்ளவும். உச்சந்தலையில் இந்த கலவையைத் தடவி சுழல் வடிவத்தில் இரண்டு நிமிடம் மசாஜ் செய்யவும். ஒரு மிதமான ஷாம்பூ கொண்டு தலையை அலசவும்.

ஆலிவ் எண்ணெய் உச்சந்தலையின் ஆழத்தில் ஊடுருவி ஈரப்பதத்தைத் தந்து கூந்தலின் வேர்க்கால்களுக்கு புத்துணர்ச்சி அளித்து, கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மேலும் எலுமிச்சையில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட் தன்மை காரணமாக, உச்சந்தலைக்கு தீங்கு விளைவிக்கும் கூறுகளில் இருந்து பாதுகாக்கப்படுகிறது . இதனால் பொடுகு தொல்லை நீங்கி, கூந்தல் உதிர்வு தடுக்கப்படுகின்றன.

Leave a Reply