முகப் பராமரிப்பு

உங்க முகத்தில் உள்ள மேடு, பள்ளங்கள் முழுமையாக மறைய சில டிப்ஸ்

பொதுவாக சிலருக்கு முகத்தில் குழிகள் மேடு, பள்ளமாகவும் அதிகம்\nபொதுவாக சிலருக்கு முகத்தில் குழிகள் மேடு, பள்ளமாகவும் அதிகம் காணப்படும். இவை முக அழகை கெடுப்பதோடு, பல்வேறு சரும பிரச்சனைகளான வெள்ளைப்புள்ளிகள், கரும்புள்ளிகள், முகப்பரு போன்றவை அதிகம் வருவதற்கு வழிவகுத்து விடுகின்றது.

முகத்தில் குழிகள் அதிகம் இருந்தால் அவர்களது முகத்தில் எண்ணெய் அதிகம் வழிவதோடு, அழுக்குகளும் அதிகம் சேரும். இதிலிருந்து எளிதில் விடுபட உங்களுக்கு சில வழிகள்.

ஐஸ் கட்டிகளைக் கொண்டு தினமும 10 நிமிடம் மசாஜ் செய்தால், சரும செல்கள் குளிர்ச்சியடைவதோடு, சருமத்துளைகளும் சுருங்க ஆரம்பிக்கும். தயிரை முகத்தில் தடவி மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

இதனால் சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேறுவதோடு, சருமத்துளைகளும் சுருங்கும்.

ஒரு பௌலில் சிறிது பேக்கிங் சோடா சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் உலர வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு, சருமத் துளைகளும் சுருங்கும்.

முட்டையின் வெள்ளைக்கருவை ஒரு பௌலில் எடுத்துக் கொண்டு, அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ, முகத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கும்.

ஒரு பௌலில் களிமண்ணை போட்டு, அதனை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இதனால் சருமத் துளைகளில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை மற்றும் அழுக்குகள் உறிஞ்சி வெளியேற்றி, சருமத்துளைகளை சுருங்கச் ஆரம்பிக்கும்.

முகத்தில் மேடு பள்ளங்களுடன், கரும்புள்ளிகளும் இருந்தால், எலுமிச்சை சாற்றில் சர்க்கரை சேர்த்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்து, கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முகத்தில் உள்ள மேடு பள்ளங்கள் விரைவில் மறையும்.

2032638515f028ea6024728cfec10fa94b8d6799c 2032083444

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button