டென்ஷன், மன அழுத்தம், எதிர்மறை எண்ணம் எல்லாமே உங்களை விட்டு ஓடிப்போக வேண்டுமா?

தீய சக்திகள் விலக பக்கெட் நீரில் உப்பு; பாதம் வைத்தால் பயம் பறந்திடும்!

* சிலர் எதற்கெடுத்தாலும் எதிர்மறையாகவே பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு ஏதோ ஒரு இனம் புரியாத பயம் இருந்துகொண்டே இருக்கும்.

* ஏதோ அபசகுணம் நடந்துவிடுமோ என்று கலங்கி, நடக்காத செயல்களை எண்ணி மனக்குழப்பத்துடன் இருப்பர். எல்லோர் மீதும் எரிந்து விழுந்து கொண்டே இருப்பர். எதற்கெடுத்தாலும் கோபம் வரும்.

* எதையோ பறி கொடுத்தது போலவே எப்போதும் இருப்பர். தவிப்பும் தயக்கமும் குழப்பமும் பயமும் என வெறுமையாய் வாழ்க்கை நகரும்.

கவலையே வேண்டாம். இதற்கு எளிய தீர்வு ஒன்று இருக்கிறது. ஒரு பக்கெட் அல்லது வாலி நீரை எடுத்துக் கொண்டு அதில் கல்லுப்பு போட்டு கலக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களது இரண்டு கால்களையும் பக்கெட் நீரில் விட்டு காலை சுத்தமாக விரல்கள், நகங்கள், முழங்கால் என அனைத்தையும் தேய்த்துக் கழுவுங்கள்.

* சிறிதுநேரம், இப்படியாக கால்களை உப்பு கலந்த நீரில் வைத்துக்கொண்டு, கண்களை மூடியபடி இருங்கள். ஒரு பதினைந்து நிமிடங்கள், இப்படியே வைத்திருந்துவிட்டு, கண்களைத் திறந்து பாருங்கள்.

கால்கள் வைக்கப்பட்டிருந்த தண்ணீரானது, கருப்பு நிறமாக மாறியிருக்கும். தண்ணீரில் லேசாக நாற்றம் கூட வரலாம். அந்தத் தண்ணீரை எடுத்து கொட்டிவிடுங்கள்.

* இப்போது, கால்களை வெளியே எடுத்ததும் ரொம்பவே களைப்பாக உணருவீர்கள். ஆனால், அடுத்தடுத்த நிமிடங்களில், இதுவரை இல்லாத சுறுசுறுப்பு உடலெங்கும் பரவியிருக்கும். எதிர்மறை எண்ணங்களும் மனதில் இருந்த குழப்பங்களும் காணாமல் போயிருக்கும்.

* டென்ஷன், மனக் குழப்பமும் இல்லாமல் இதுவரை இல்லாத தெளிவுடன் நீங்கள் இருப்பது கண்கூடாகவே உணர்வீர்கள். ஆகவே பக்கெட்டில் உள்ள கல்லுப்பு தண்ணீரானது உங்களுக்குள் உள்ள பயத்தையும் எதிர்மறை எண்ணங்களையும் தூக்கி எறிந்துவிட்டு, உங்களை நேர்மறை சக்தியாகவே மாற்றிவிடும்.

Leave a Reply