ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவு!!

முதுகு வலி, இடுப்புவலி இரண்டுமே இருக்காது. மலையேற்றம் மேற்கொள்பவர்கள் இதனை உட்கொண்டால் உடல்சோர்வே இருக்காது.பெண்களுக்கு கர்ப்பப்பை மிகவும் வலுப்பெறும்.

தேவையான பொருட்கள் :

கருப்பு உளுந்து – ஒரு டம்ளர்,

பச்சரிசி – அரை டம்ளர்

வெந்தயம் -ஒரு தேக்கரண்டி

பூண்டு – 20 பல்லு

வெல்லம் அல்லது கருப்பட்டி- இனிப்புக்கு ஏற்றது போல்

தேங்காய்- ஒரு மூடி

செய்முறை :

உளுந்தம்பருப்பு,பச்சரிசி,வெந்தயம்,உரித்த பூண்டு அனைத்தையும் போட்டு ஆறு டம்ளர் (பருப்பு அளந்த டம்ளரில்) தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து 8 விசில் வரும் வரை விட வேண்டும். இது தயாராவதற்குள் வெல்லம் அல்லது கருப்பட்டியை சிறிதளவு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி வைத்துக் கொள்ளவேண்டும்.தேங்காய் அரைத்து பாலும் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்.

8 விசில் வந்தவுடன் குக்கரை இறக்கியவுடன், (சூடாக இருக்கும் போதே) நன்கு மசித்துவிட்டு வெல்லப்பாகு,தேங்காய்ப் பால் இரண்டையும் ஊற்றி சூடாக சாப்பிடவும். தேங்காய் துருவியும் போடலாம். (சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் வெல்லம் தேங்காய் இரண்டையும் தவிர்த்துவிடலாம்.செரிமானப் பிரச்சனை உள்ளவர்கள் தேங்காயை மட்டும் தவிர்த்து விடலாம்.)

Related posts

ரத்த சோகையை போக்கும் பீட்ரூட்.!

nathan

இந்த உணவுகளை எல்லாம் வேக வைத்து தான் சாப்பிட வேண்டும்!!!

nathan

காரசாரமான உணவு சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!!

nathan

Leave a Comment

%d bloggers like this: