ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா தேங்காய் எண்ணெயில் இவ்வளவு நன்மைகளா? தெரிந்துகொள்வோமா!.

தேங்காய் எண்ணெய், நம் பண்பாட்டின் அடையாளம். தேங்காய் எண்ணெயின் நற்பலன்கள்:

* முடி கருமையாகவும்,முடி உதிர்வது நிற்கவும் காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணையில் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்து வர பலன் கிடைக்கும்.

* வேப்ப எண்ணையில் விளக்கெண்ணை,தேங்காய் எண்ணெய் கலந்து சூடாக்கி தேய்க்க மூட்டு வலி குணமாகும்.

* மாசிக்காய், கடுக்காய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், தேங்காய் எண்ணெய் சரி சமமாக கலந்து தடவினால் பித்த வெடிப்பு குறையும்.

சீமை அகத்தி இலைகளை எடுத்து நன்றாக அரைத்து தேங்காய் எண்ணெயில் குழைத்து படர் தாமரை இருக்கும் இடத்தில் போட்டு நன்கு தடவி வந்தால் படர்தாமரை குறையும்.

* தேங்காய் எண்ணெய்யில் வெற்றிலைகளைப் போட்டு நன்றாகக் காய்ச்சி அந்த எண்ணெயைத் தடவ தோல் வியாதிகள் நீங்கும்.

கரி மசாலாக்களில் அதிக அளவு பயன்படும் கசகசாவின் பயன்களை பார்ப்போமா!.

* வாழைத்தண்டடை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணெயில் குழப்பி தடவினால் தீப்புண் வடு குறையும்.

* தலைவலி குறைய மிளகை சிறிது தேங்காய் எண்ணெயை விட்டு நன்கு அரைத்து நெற்றியில் தடவி வந்தால் தலைவலி குறையும்.

* அரிப்பு ஏற்படும் இடங்களில் தேங்காய் எண்ணெயில் எலுமிச்சைச்சாறு கலந்து தடவி வந்தால் அரிப்பு குறையும்.

* நெஞ்சுசளி தீர தேங்காய் எண்ணெய் இல் கற்பூரம் சேர்த்து சுட வைத்து நெஞ்சில் தடவலாம்.

* வெள்ளைப்பூ கரிசலாங்கண்ணி இலையை நன்கு அரைத்து நிழலில் காயவைத்து அதை தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து முடியில் தேய்த்து வந்தால் தலை முடி கறுப்பாக வளரும்.

* தேங்காய் எண்ணெய் எடுத்து அதற்கு சம அளவு எலுமிச்சை சாறு கலந்து தலையில் நன்றாக தடவி 1 மணி நேரம் கழித்து குளித்து வந்தால் தலையில் பேன்கள் குறையும்.

* வாயில் ஏற்படும் சாதாரண புண் மற்றும் காயங்களுக்கு கடுக்காய் பொடி சிறிதளவு எடுத்து தேங்காய் எண்ணையுடன் சேர்த்து காயங்கள் மீது போட்டு வர சரியாகும்.

173041966c8aa280aa858882ceda343d36534907e 407840857

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button