கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

ஸ்கால்ப்பை ஆரோக்கியமாக்கும் வழிகள்

1 முட்டையை உடைத்து அதை நன்கு அடித்து கூந்தல் முழுவதும் பூசி 40 நிமிடங்கள் கழித்து, கூந்தலை அலசவும். முட்டையில் புரதமும் கொழுப்பும் நிறைந்துள்ளதால், கூந்தலுக்குச் சிறந்த ஹேர் பேக்காக அமையும்• ஒரு பவுளில் ஆப்பிள் சிடர் வினிகரை ஊற்றிக் கொள்ளுங்கள், பஞ்சால் வினிகரை தொட்டு ஸ்கால்பிலும் கூந்தலிலும் பூசி, பின் 10 நிமிடங்கள் கழித்து கூந்தலை அலசுங்கள்.• ஆலிவ் எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், ஆமணக்கு எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், தேங்காய் எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், மூலிகை எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், நல்லெண்ணெய் 1 டேபிள் ஸ்பூன் ஆகியவற்றை சூடு செய்து, ஸ்கால்ப்பில் தடவி நன்கு மசாஜ் செய்யவும்.ஸ்கால்ப்பை ஆரோக்கியமாக்கும் வழிகள் :

• 10 விரல்களின் நுனியால் மண்டையை மிதமான அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்திடுங்கள். மசாஜ் செய்யும்போது, முன்னந்தலையிலிருந்து பின்னந்தலை வரை மசாஜ் செய்யவும்.

• ப்ளாஸ்டிக் சீப், நகங்கள் ஆகியவை ஸ்கால்ப்பை சேதப்படுத்தும். மர சீப்பால் கூந்தலை அழுத்தி வார, ரத்த ஒட்டம் சீராகப் பாயும்

• டீ ட்ரீ எண்ணெயை (Tea Tree oil) ஸ்கால்ப்பில் பூசி மசாஜ் செய்யலாம்

• தலையணையின் உறை சாட்டின் (satin) துணி வகையாக இருக்கலாம். அதுபோல கூந்தலைப் போர்த்தும் ஸ்கார்ப் (Scarf) சாட்டினாக இருப்பது நல்லது. ஏனெனில் மற்ற துணி வகைகள் கூந்தலில் இருக்கும் ஈரத்தன்மையை உறிஞ்சிவிடும்.

•  5 நிமிடங்களுக்கு மேல் கூந்தலை ஹீட்டரால் காயவைக்கக்கூடாது. அவசர அவசரமாக கூந்தலை வாரி, சிக்கு எடுக்கக் கூடாது.

• ஸ்கால்ப் ஈரமாக இருக்கையில் கூந்தலை சீப்பால் வாருவது தவறு. முள்ளங்கி, சோயா பீன்ஸ், புரோகோலி, ஃப்ளாக்ஸ் விதைகள் ஆகியவற்றை தினமும் சாப்பிடலாம். ஸ்கால்ப்பில் ஏற்படும் பிரச்சனைகள் வராது.110425 hair 700

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button