கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

protecting hair loss -கூந்தல் உதிர்தலைத் தடுக்கும் இயற்கை வழிகள்!!!

இயற்கைப் பொருட்கள் தான் எப்போதும் சிறந்தது என்று அனைவருக்குமே தெரியும். அதுமட்டுமின்றி, அத்தகைய பொருட்களில் தான் அனைத்து சத்துக்களும் இருக்கின்றன. ஆகவே கூந்தல் உதிராமல் இருக்க வேண்டுமென்று நினைத்தால், செயற்கை முறையை கடைபிடிப்பதை தவிர்த்து, இயற்கை வழிகளைப் பின்பற்ற வேண்டும். இப்போது அந்த இயற்கை வழிகள் என்னவென்று பார்ப்போமா!!!

26 1356514289 oils

எண்ணெய் குளியல்
ஏதாவது ஒரு எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, பின் அதனை தலையில் தடவி, நன்கு மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து, பிறகு ஷாம்பு போட்டு கூந்தலை நன்கு அலச வேண்டும். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், கூந்தல் நன்கு வளர்வதோடு, உதிராமலும் இருக்கும்.
26 1356514330 onionjuice
இயற்கையான சாறுகள்
அதென்ன இயற்கையான சாறுகள் என்று பார்க்ககிறீர்களா? அது வேறொன்றும் இல்லை, பூண்டு, இஞ்சி அல்லது வெங்காயத்தின் சாற்றை எடுத்து, இரவில் படுக்கும் முன் ஸ்கால்ப்பில் தடவி ஊற வைத்து, காலையில் எழுந்து குளித்து வர வேண்டும். இதனால் முடி உதிர்வதை தடுக்க முடியும்.
head massage
தலை மசாஜ்
தினமும் தலைக்கு எண்ணெய் தடவும் போது, சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் தலையில் இரத்த ஓட்டம் அதிகரித்து, மயிர்கால்கள் நன்கு வலுவடையும். அதிலும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் லாவண்டர் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயை சிறிது சேர்த்து மசாஜ் செய்வது நல்லது.

26 1356514396 greentea
ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள்
வெதுவெதுப்பான கிரீன் டீயை ஸ்கால்ப்பில் படும்படியாக தடவி, ஒரு மணிநேரம் ஊற வைத்து, பின் நீரில் அலச வேண்டும். ஏனெனில் கிரீம் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால், கூந்தல் உதிர்தலை தடுத்து, கூந்தலின் வளர்ச்சியை அதிகரிக்கும்.
26 1356514424 meditation

தியானம்
நம்புவீர்களோ இல்லையோ, மனஅழுத்தம் இருந்தாலும், கூந்தல் உதிர்தல் ஏற்படும். எனவே மன அழுத்தத்தை குறைக்க தியானம் செய்தால், கூந்தல் உதிர்தலைத் தடுக்கலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button