ஆரோக்கியம்வீட்டுக்குறிப்புக்கள்

வீட்டுக் குறிப்புகள் சில பயனுள்ள குறிப்புகள்……

பூண்டை அவ்வபோது உரித்து கொண்டிருந்தால் நேரம் வீணாகும். ஆகையால் பூண்டை தண்ணீரில் ஊற வைத்து எடுத்தால் எளிதில் வந்து விடும்.

புளியை அவ்வபோது கரைத்துகொண்டிருப்போம். இதனால் மீதம் உள்ள புளி வீணாகும். இதனை தவிர்க்க புளி பேஸ்ட் தயார் செய்து வைத்து கொள்ளலாம்.

மில்க்மெய்டு சேர்த்து சர்க்கரை பொங்கல் தயாரித்தால் அதன் சுவை மேலும் அதிகரிக்கும்.
36c9822a95
எந்த அரிசியாக இருந்தாலும் 15 நிமிடங்களுக்கு குறையாமல் ஊற வைத்து உலையில் வேகவைத்தால் அது வேகும் நேரம் குறையும். எரிபொருள் மிச்சமாகும்.

பலகாரம் செய்த பிறகு மீதமாகும் சுட்ட எண்ணெயில் வாழைக்காய், கருணைக்கிழங்கு வறுவல் செய்தால் சுவை மிகுதியாக இருக்கும்.

பாகற்காயில் உள்ள கசப்பு போக சிறிது உப்பு சேர்த்து பிசைந்து 5 நிமிடம் வைத்துவிட்டு பிறகு கழுவி விட்டு சமைத்தால் கசப்பு தன்மை குறைவாக இருக்கும்.
b038fdb435d011a
விளக்கு போன்ற பித்தளை பாத்திரங்களை புளி சேர்த்து தேய்ப்பதற்கு பதில் எலுமிச்சை சாறை பாத்திரம் தேய்க்கும் பொடியுடன் சேர்த்து தேய்தால் எண்ணெய் பிசுக்கள் மறைந்து பளபளப்பாக மாறிவிடும்.

வாழைக்காய் நறுக்கும் போது கரையாகும், இதனை தடுக்க சிறிது எண்ணெய் பூசிக்கொண்டால் கரை ஏற்படாது.

பூக்களை கவரில் வைப்பதை விட ஒரு டைட் டப்பாவில் போட்டு வைக்கலாம்.

வேலைக்கு செல்லும் பெண்களுக்கு காலையில் நேரம் கிடைப்பதில்லை, இதனால் கிழங்கு போன்றவற்றை முதல் நாள் இரவே வேகவைத்து கொள்ளலாம்.

முள்ளங்கி சமைக்கும் போது லேசாக வதக்கி சமைத்தால், எளிதில் சளி பிடிக்காது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button