ஆரோக்கிய உணவுஆரோக்கியம்

பூப்பெய்திய பெண் பிள்ளைகளுக்கு என்னதாங்க சாப்பிட கொடுக்கணும்…..

பூப்பெய்திய குழந்தைகளை தனிமைப்படுத்தாமல் அவர்களை மன ரீதியாகவும், உடல்ரீதியாகவும் பலமிக்கவர்களாக மாற்ற வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை.

சிலர் பூப்பெய்திய பெண்பிள்ளைகளுக்குசத்துள்ள உணவு கொடுப்பதாக நினைத்து கெட்ட கொழுப்புள்ள உணவுபொருட்களை அதிகமாக கொடுத்து.

பிள்ளைகளின் உடலை பருமனாக்கி விடுகின்றனர். இந்த மோசமான செயலுக்கு’ வயசுக்கு வந்தா கொஞ்சம் ஒடம்பு போடத்தான் செய்யும்’ என்கிறகருத்தையும் முன் வைப்பார்கள்.இவ்வாறு பூப்பெய்திய சமயத்தில் உடல் பருமன் ஏற்படுவதால் பிற்காலத்தில் தைராய்டு,கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் போன்ற மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். அப்போ என்னதாங்க சாப்பிட கொடுக்கணும்…..

பூப்பெய்திய பெண் பிள்ளைகளுக்கு காலங்காலமாய் எவ்வாறான உணவு முறைகளை பின்பற்ற வேண்டும் என்று நம் முன்னோர்கள் ஒரு லிஸ்டே போட்டுள்ளனர் அதில் சில உங்களுக்காக….
e503cf77ce3b8c9
உளுந்து:

உளுந்து எலும்புகளுக்கு மிகுந்த பலத்தை கொடுக்கக்கூடிய உணவு வகை. இந்த உளுந்தில் களி, புட்டு, பலாகாரம் என பிடித்த வகையில் ருசியாக செய்து கொடுக்கலாம். உளுந்தை, பூப்பெய்திய சமயத்தில் பிள்ளைகளுக்கு கொடுப்பதினால் சீரான மாதவிடாய் சுழற்சிக்கு உதவுவதுடன், ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன் ஆகிய ஹார்மோன்கள் சீராகச் செயல்படவும் உதவும்.

நாட்டுக்கோழி முட்டை:

‘அதென்னங்க நாட்டுக்கோழி முட்டை ! ப்ராய்லர் முட்டை கொடுக்க கூடாதா?’ என கேட்பவர்களும் உண்டு. ப்ராய்லர் கோழி மிக வேகமாக வளர, அதற்கு ஊசி போடப்படுகிறது என ஏற்கெனவே பதிவிட்டிருந்தோம். ஆக முடிந்தவரை வீடுகளில் அல்லது சிறு பண்ணைகளில் வளர்க்கப்படும் நாட்டு கோழி முட்டைகளை வாங்கி கொடுக்க வேண்டும். புரதம் நிறைந்த நாட்டு முட்டைகளில் உடலுக்கு தேவையான கொழுப்புக்கள் இருக்கும். எனவே ஒரு நாளில் ஒன்று அல்லது இரண்டு முட்டைகளை நல்லெண்ணெயுடன் பச்சையாகவோஅல்லது நல்லெண்ணெயில் சமைத்தோபூப்பெய்திய பெண்பிள்ளைகளுக்கு கொடுக்கலாம்.

நல்லெண்ணெய்:

நல்லெண்ணெயில் நல்ல கொழுப்பு அதிகம் உள்ளது. அதோடு ஹார்மோன் வளர்ச்சியை நல்லமுறையில் தூண்டவும் நல்லெண்ணெய் உதவும். எனவே பூப்பெய்திய பிள்ளைகளுக்கு கட்டாயம் நல்லெண்ணெய்கொடுக்க வேண்டும்.

கீரை வகைகள்:

பூப்பெய்தும் போதும், மாதவிடாயின்போதும் அதிக இரத்தப்போக்கு ஏற்படும். இதனால் ரத்த சோகை வர வாய்ப்புள்ளது .எனவே வாரம் இரண்டு முறையாவது முருங்கை கீரை, பொன்னாங்கண்ணி கீரை, பசலை கீரை, கல்யாண முருங்கை கீரை, அரைக்கீரை போன்ற கீரைகளை கொடுக்க வேண்டும்.

பயறு வகைகள்:

கொண்டைக்கடலை, பொட்டுக்கடலை போன்ற பயறு வகைகளை அடிக்கடி கொடுத்து வருவதால் பிற்காலத்தில் கர்ப்பபை சார்ந்த பிரச்சனைகள் அண்டாது.

தானிய வகைகள்:

கேழ்வரகு, கம்பு, தினை, சோளம் போன்ற தானியங்களை ஒன்றாக அரைத்து நாட்டுச் சர்க்கரை சேர்த்து சத்துமாவு உருண்டையாக, பூப்பெய்திய பிள்ளைகளுக்கு கொடுக்கலாம்.

அசைவ உணவுகள்:

பொதுவாக பூப்பெய்திய தருணங்களில் அசைவ உணவுகள் கொடுக்க தேவையில்லை. அப்படியே கொடுக்க விரும்பினாலும் ஆடு, மீன், நாட்டுக்கோழி போன்றவற்றின் இறைச்சியை அளவாக கொடுக்கலாம். அதிகமாக கொடுத்தால் கெட்ட கொழுப்பு உடலில் அதிகமாக சேர்ந்து விடும்.

நமது பாட்டிமார்கள் ‘அடியே வயசுக்கு வந்தப்ப கொடுக்குற சாப்பாடுதான் அவள ஆயுசுக்கும் காக்கும்’ என சொல்வதன்அர்த்தம் பூப்பெய்திய போது கொடுக்கும் சத்தான, ஆரோக்கியமான உணவுகளே பிற்காலத்தில் கர்ப்பப்பை தொடர்பான எந்த பிரச்சனையும் பெண்பிள்ளைகளை அண்ட விடாது என்பதாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button