கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

ஆரோக்கியமான கூந்தலுக்கு

2ec0b1e2e574cc2ac1b9728aa638d6af_large*தலை முடியின்  வறட்டுத் தன்மையைப் போக்கி, ஜொலி ஜொலிக்க வைக்கும் சக்தி  ஆரஞ்சு தோல் தோலுக்கு உண்டு.  உலர்ந்த ஆரஞ்சு தோலுன், துண்டுகளாக்கிய வெட்டிவேர், சம்பங்கி விதை, பூலான் கிழங்கு, கடலை பருப்பு, பயந்தம் பருப்பு, கசகசா இவை ஒவ்வொன்றும் தலா  250  ௦கிராம் எடுத்து, மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள்.  

 

இந்தப் பவுடரை வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால்.   முடி பளபளப்பாகவும், வாசனையாகவும் இருக்கும்.   இந்த பவுடரை உடம்புக்கும் தேய்த்து குளிக்கலாம்,வாசனை பவுடராகவும்  இதை பயன்படுத்தலாம்.       

*கூந்தலுக்கு எப்பொழுதும் இறுக்கமாக “க்ளிப்” போடக்கூடாது.இவ்வாறு செய்தால் முடி உடைந்து போகும்.    

*வாரம் ஒரு முறை கண்டிப்பாக ஆயில் மசாஜ் செய்து கொள்ள வேண்டும்.அப்பொழுது தான் உதிராமல் நன்கு வளரும்.ஆலிவ் ஆயில் பயன்படுத்தி முறையாக மசாஜ் செய்தால், அது கூந்தலை வலுப்படுத்துவதுடன், கூந்தல் உதிர்வு மற்றும் முடி நரைத்தல் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button