அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

உங்க முகத்தை வெள்ளையாக மாற்ற வீட்டிலேயே ஹெர்பல் ஃபேஸ்வாஷ் பவுடர் தயாரிப்பது எப்படி…?

வீட்டிலேயே இயற்கையான முறையில் ஃபேஸ்வாஷ் பவுடர் செய்து பயன்படுத்தி பலன் கிடைத்த பிறகு நீங்கள் கடைக்கு சென்று எந்த ஃபேஸ்வாஷ் மற்றும் ஃபேஸ்வாஷ் பவுடரையும் வாங்க மாட்டீர்கள். அந்த அளவுக்கு தரமானதாகவும் பயன் தரக்கூடியதாகவும் இருக்கும். எவ்வாறு செய்வது எனப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் – 3/4 கப்

உலர்ந்த ரோஜா இதழ்கள் – 3/4 கப்

பாதாம் – 8

114685689ccdb91553f556617ba7156cbbc95e80e 561140900

செய்முறை: மேல் கூறப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் மிக்சி ஜாரில் சேர்த்து பவுடராக அரைத்து கொள்ளவும்.

பின்பு அவற்றை ஒரு கண்ணாடி ஜாரில் சேமித்து வைத்துக்கொள்ளவும். இந்த கலவையை தேவைப்படும் போது எடுத்து தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டர் கலந்து, முகத்தில் பூசி சிறிது நேரம் நன்றாக தேய்த்து, பின்பு குளிர்ந்த நீரில் குளிக்கவும்.

பயன்கள்: இந்த ஹெர்பல் ஃபேஸ்பேக் போட்டால் வெயிலால் ஏற்படும் சரும பிரச்னைகள் போகும். இயற்கையாகவே சருமம் பளிச்சிடும். சருமத்துக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும்.

இயற்கையான க்ளோ கிடைக்கும். தாய்மார்கள், கர்ப்பிணிகள், பிறந்த குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button