​பொதுவானவை

செல்போனை ஜாக்கிரதையாகப் பயன்படுத்த சில யோசனைகள்! ~ பெட்டகம்

 

செல்போனை ஜாக்கிரதையாகப் பயன்படுத்த சில யோசனைகள்!

Apple iPhone 5s

dot3%281%29செல்போனைப்
பயன்படுத்தும்போது காது மடலில் வலி, காது சூடாதல் போன்ற பிரச்னைகள்
ஏற்படக்கூடும். அதனால் ஹேண்ட்ஸ் ஃப்ரீ பயன்படுத்துவதன் மூலம் செல்போன்
கதிர்வீச்சு பாதிப்புகளில் இருந்து ஓரளவு தப்ப முடியும்.

dot3%281%29உங்கள்
செல்போனின் சிக்னல் குறைவாக இருக்கும்போது, செல்போனில் பேசுவதைத்
தவிர்க்கவும். ஏனெனில் அந்த நேரத்தில் செல்போன், சிக்னலை முழுமையாகப் பெற
அதிக அளவு கதிர்வீச்சை வெளிப்படுத்தும்.

dot3%281%29செல்போன்
பேசும்போது மூளையின் செயல்பாடு சற்றே அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டு
உள்ளது. எனவே, ஒரே பகுதியில் போனை வைத்துப் பேசாமல் அவ்வப்போது மாற்றி
மாற்றி வைத்துப் பேசுங்கள்.

dot3%281%29தலையணைக்கு
அடியில் செல்போனை வைத்துவிட்டுத் தூங்கும் பழக்கத்தைத் தவிர்க்கவேண்டும்.
காரணம் ரேடியோ அலைவரிசைகள் மூளையைப் பாதிக்கும் வாய்ப்புள்ளது.

dot3%281%29காதில்
செவித்திறன் கருவிகள் ஏதேனும் பொருத்தியிருந்தால், குறிப்பிட்ட அந்தப்
பகுதியில் இருந்து 15-30 செ.மீ தூரத்துக்கு செல்போனைத் தள்ளியே வைத்துப்
பேசுங்கள்.

dot3%281%29மொபைல் வாங்கும்போதே அதனின் ஷிகிஸி  அளவை சரி பார்த்துக்கொள்ளவும்.

dot3%281%29அழைப்பு
இணையப்பெற்ற பிறகு போனைக் காதில் வைத்துப் பேசவும். காரணம், முதல்
ஒலியானது அதிக அளவில் தொடங்கி, பின்னர் தேவையான அளவுக்குக் குறையும்.
அழைப்பு இணையும் சமயத்தில் அதிக ஆற்றல் வெளிப்படும்.

dot3%281%29செல்போன்களை
சட்டையின் இடதுபக்க பாக்கெட்டில் வைத்தால், கதிர்வீச்சின் மூலம் இதயம்
பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு. எனவே அதைத் தவிர்க்கவும்.

dot3%281%29போனில்
பேசும்போது இரண்டு ஓரங்களை மட்டும் பிடித்துப் பேசவும். கைகளால்
முழுவதுமாகப் பின் பக்கத்தை மூடிக்கொண்டு பேச வேண்டாம். வைப்ரேட் மோடில்
செல்போனை வைத்திருப்பதைத் தவிர்க்கவும். பாக்கெட்டில் வைத்திருப்பதால் இதன்
மூலம் ஏற்படும் அதிர்வலைகள் அதிகமாக உடல் பாகங்களைத் தாக்குகின்றன. மிக
முக்கியமாக போனில் செலவிடும் நேரத்தைக் குறையுங்கள். அழைப்புகளுக்கான
நேரத்தையும் கட்டுப்படுத்தினால் உடல்நலன் பாதுகாக்கப்படும்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button