ஆரோக்கிய உணவு

சில பொருட்களை கழுவும்போது அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிலிருந்து வெளியேற வாய்ப்புள்ளது. இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க…! 

பொதுவாக எந்தவொரு உணவாக இருந்தாலும் நன்கு கழுவி விட்டு சாப்பிடுவதுதான் ஆரோக்கியம். அப்போதுதான் அதிலிருக்கும் நச்சுக்கள், பாக்டீரியாக்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவை உணவுப்பொருட்களை விட்டு செல்வதுடன் அந்த பொருளில் இருந்து நமக்கு ஊட்டச்சத்துக்கள் மட்டும் கிடைக்கும்.

ஆனால் இந்த விதி அனைத்து உணவுப்பொருட்களுக்கும் பொருந்தாது.

உண்மைதான், சில பொருட்களை சமைக்கும் முன் கழுவக்கூடாது. ஏனெனில் சில போரடிட்களை கழுவும்போது அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிலிருந்து வெளியேற வாய்ப்புள்ளது. இந்த பதிவில் எந்தெந்த பொருட்களை கழுவாமல் சமைக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
61080500.cms
பாஸ்தா

உங்களுக்கு இது ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். பாஸ்தாவை ஏன் கழுவாமல் சமைக்க வேண்டும்? இதற்கான பதில் என்னவென்றால் இதனை கழுவுவது அதன் மேல் இருக்கும் ஸ்டார்ச்சை நீக்குகிறது. இதுதான் சாஸ் மற்றும் இதர பொருட்களை பாஸ்தா உறிஞ்சிக்கொள்ள உதவுவதாகும். இதனால் பாஸ்தாவின் சுவை குறையும்.

காளான்

காளான்கள் தண்ணீரை மிகவும் வேகமாக உறிஞ்சிவிடும். எனவே அவற்றை தண்ணீரில் ஊறவைப்பது மற்றும் கழுவது அவற்றின் நெகிழ்வுத்தன்மையில் பாதிப்பை ஏற்படுத்தும். இதை சுத்தப்படுத்த சிறந்த வழி காய்ந்த துணி கொண்டு துடைப்பதுதான்.
images
இறைச்சி

இறைச்சியை (மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி) கூட ஓடும் நீரில் கழுவப்படக்கூடாது, ஏனெனில் பாக்டீரியா உங்கள் கைகளில் பரவி சமையலறை முழுவதும் பரவ வாய்ப்புள்ளது. பேப்பராய் வைத்து இறைச்சியில் இருக்கும் நீரை முழுவதும் எடுத்துவிட வேண்டும். அதன்பின்னர் உங்கள் கைகளை சுடுநீரில் கழுவ மறந்துவிடாதீர்கள். இறைச்சியை வேகவைத்து அதற்க்கு பின்னர் உபயோகிக்கவும்.
erewr
முட்டை

முட்டையை கழுவுவது என்பது தவறான யோசனையாகும். இது முட்டையின் மீது இருக்கும் சிறப்பு பாதுகாப்பு படலத்தை சிதைக்கும். இந்த படலம் முட்டையை பாக்டீரியாக்களின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறது. எனவே முட்டையை கழுவுவது நீங்களே அதன் ஆரோக்கியத்தை கெடுப்பது போலாகும்.

சிக்கன்

சிக்கனில் சால்மோனெல்லா என்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா உள்ளது, இதனை தண்ணீரில் கழுவுவதன் மூலம் வெளியேற்றி விட முடியாது. இதனை உங்கள் கைகள் கொண்டு சுத்தம் செய்யும்போது இது உங்கள் கைகள் மூலம் மற்ற இடங்களுக்கும் பரவுகிறது. இதனை நீக்க சிறந்த வழி சிக்கனை சமைக்கும் முன் இரண்டு முறை நன்கு வேகவைப்பதுதான். அந்த வேகவைத்த தண்ணீரை வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button