ஆரோக்கியம் குறிப்புகள்

எலும்புகளில் கால்சியக் குறைபாடு ஏற்படுவதால் தேய்மானம் ஏற்படுகின்றது. பெண்களுக்கு எந்த வயதில் ஏற்படுகிறது தெரியுமா…?

ஆண்களில் வயதானவர்களையும், பெண்களுக்கு மாதவிடாய் நின்று மெனோபாஸ் காலத்திலும் எலும்பு தேய்மான நோய் பாதிக்கிறது.

பொதுவாக 45 வயதுக்கு மேற்பட்ட பெண்மணிகளில் மூவரில் ஒருவருக்கு எலும்புத் தேய்மான நோய் இருப்பதாக மருத்துவ அறிக்கை கூறுகின்றது.

எலும்பு தேய்மானம் என்னும் நோய் பொதுவாக பெண்களை அதிகமாக அவதிக்குள்ளாக்கிவிடுகிறது. பெண்களை 45 வயது முதல் இந்த நோயின் தாக்கம் ஆரம்பிக்கத் தொடங்கி வயது அதிகரிக்க அதிகரிக்க நோயின் தீவிரம் அதிகரித்து மிக அதிக பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது.
nkjkjk
எலும்புகள் உறுதியானதாக அமைய முக்கியமாக கால்சியம் என்ற தாது உப்பு அவசியமாகின்றது. இந்த தாது உப்பை நாம் உண்ணும் உணவில் இருந்து எலும்புகள் எடுத்துக்கொள்ளுகின்றன. நாம் முதுமையை நெருங்க நெருங்க இத்தன்மை மெதுவாக குறைந்து மறைந்து போய்விடுவதால் எலும்புகளில் கால்சியக் குறைபாடு ஏற்படுவதால் தேய்மானம் ஏற்படுகின்றது.
kjlkl
இந்த நோய் ஏற்பட்டால் எலும்பு கிட்டத்தட்ட பஞ்சு போல் ஆகிவிடும் என்று எலும்பு நோய் சிகிச்சை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். உடலில் கால்சியம் சத்து குறைவதும், வைட்டமின் “D” குறைபாடும் பெரும்பாலும் இந்த நோய்க்குக் காரணமாவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மாதவிடாய் காலம் முடிந்த பிறகு ஈஸ்ட்ரோஜென் உடலில் குறைந்து விடுவதால் பெண்களை இது அதிகம் பாதிக்கிறது. முக்கியமாக பெண்களில் “மெனோபாஸ்” எனும் மாதவிடாய் நிரந்தரமாக நின்று போகும் காலகட்டங்களில் உடலில் ஏற்படும் ஹோர்மோன் மாறுபாடுகளால் எலும்புகளில் கால்சியம் உப்பை சேகரித்து வைக்கும் பண்புகள் வலுவிழந்து இந்த குறைபாடு ஏற்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button