உடல் பயிற்சி

பின் தொடையை குறைக்கும் வார்ம் அப்

 

பின் தொடையை குறைக்கும் வார்ம் அப் கால் மீது கால் போட்டு அமர்வது, குதிகாலைத் தரையில் அழுத்திச் சுழற்றி முட்டியில் சுளுக்கு எடுப்பது, நிற்கும் நிலை, அமரும் நிலை தவறாக இருப்பது,  ஒரே நிலையில் நீண்ட நேரம் இருப்பது ஆகியவற்றால் மூட்டு பாதிப்படையலாம்.

உடல் எடைக்கும், மூட்டு வலிக்கும் நேரடித் தொடர்பு உண்டு. உடல் பருமன் காரணமாக முழங்கால் மூட்டுக்கு அழுத்தம் உண்டாவதால், வலி ஏற்படுகிறது. சில எளிய பயிற்சி மூலம் தொடைப் பகுதி தசைகளுக்கு வலுகூட்டினால், அவை மேல் முழங்கால் மூட்டினை இழுத்துப் பிடித்து கீழ் மூட்டுடன் உரசுவதைத் தவிர்த்துவிடும்.

இந்தப் பயிற்சிகளை தொடர்ந்து செய்துவந்தால், 1 மாதத்தில் வித்தியாசத்தைக் காணலாம். இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் நேராக நின்று கைகளை இடுப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். வலது காலை சற்று முன்னே நிறுத்தி, (படத்தில் உள்ளபடி) குதிகாலால் ஊன்றவும்.

உடலின் மேல் பகுதியை முன் நோக்கி வளைக்க வேண்டும். 10 முதல் 30 நொடிகள் அதே நிலையில் இருந்து, பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இந்தப் பயிற்சியை இடது மற்றும் வலது பக்கத்துக்கு முறையே 5 முதல் 7 தடவை வரை செய்ய வேண்டும்.

Related posts

பின்னழகை அழகாக்கும் பயிற்சி

nathan

நீங்கள் உடல் எடையை குறைக்கனும் இல்லையென்றால் உடலை நல்ல கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள ஆசைப்படுகிறீர்களா?

sangika

இந்த நாட்களில் உடற்பயிற்சி செய்யவேண்டாம்

nathan

முதியவர்களுக்கான 4 பயிற்சிகள்

nathan

முகத்தின் பளிச் தோற்றத்திற்கு விரல் யோகா

nathan

அடிவயிற்றில் வலிமை தரும் பயிற்சி

nathan

கோணாசனம்: முதுகுவலி தீர எளிய பயிற்சி

nathan

மனஅமைதி, மனஅழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு!…

sangika

உடற்பயிற்சியில் நடைபயிற்சி சிறந்தது -தெரிஞ்சிக்கங்க…

nathan