அசைவ வகைகள் அறுசுவை

நண்டு பிரியாணி.! செய்வது எப்படி.!

தேவையான பொருட்கள்:
தக்காளி – 2
நண்டு – 400 கிராம்
வெங்காயம் – 2
பாசுமதி அரிசி – 300 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது – 2 ஸ்பூன்

பச்சை மிளகாய் – 5
புதினா, கொத்தமல்லி, உப்பு – தேவையான அளவு
சிவப்பு மிளகாய் தூள் -1 1/2 ஸ்பூன்
தேங்காய் பால் – கால் கப்
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

நெய், எண்ணெய் – தேவையான அளவு
அன்னாசிப்பூ – 2
கரம் மசாலா – அரை ஸ்பூன்
எலுமிச்சை – 1
ஏலக்காய் -5
பட்டை – 2
மல்லித்தூள் – 1 ஸ்பூன்
தயிர் – 4 ஸ்பூன்.

நண்டு பிரியாணி செய்முறை:

முதலில் நண்டை நன்றாக சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும். பின்னர், வெங்காயம், தக்காளி கொத்தமல்லியை ஆகியவற்றை பொடி பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.

பின்னர் பாசுமதி அரிசியை நன்றாக கழுவி எடுத்து உதிரி உதிரியாக வேக வைத்து தனியாக வைத்து கொள்ளவும்.

பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் மற்றும் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் ஏலக்காய், கல்பாசி, அன்னாசிப்பூ மற்றும் பட்டை சேர்த்து தாளிக்கவும்.

பின்னர், அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும், வெங்காயம் நன்றாக வதங்கி நிறம் மாறிய பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

அதனுடன் பச்சைமிளகாய், தக்காளி மற்றும் புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும், பின்னர், தயிர், மிளகாய்தூள், மஞ்சள்தூள், தனியாதூள், கரம்மசாலா சேர்த்து கிளறவும்.

இதனுடன் நண்டை சேர்த்து கிளறி, பின், போதுமான அளவு தேங்காய் பாலை சேர்த்து, சிறிது எலுமிச்சை சாறு கலந்து பத்து நிமிடங்கள் வேக வைத்து இறக்கவும். பின்னர் சாதத்துடன் மசாலாவை கலந்து கிளறி கால் மணி நேரம் தம் கட்டி இறக்கி சுட சுட இறக்கவும்.

நண்டு நன்றாக வெந்ததும் தயார் செய்து வைத்துள்ள சாதத்துடன் மசாலா கலவையை சேர்த்து கிளறி 15 நிமிடங்கள் தம் கட்டி இறக்கினால் சுவையான நண்டு பிரியாணி ரெடி.

Related posts

சூப்பரான சத்தான தக்காளி கோதுமை தோசை..

sangika

முட்டை மசாலா சமையல் குறிப்புகள்

nathan

காரமான மட்டன் மசாலா

nathan

Leave a Comment

Live Updates COVID-19 CASES
%d bloggers like this: