லொஸ்லியாவின் நிஜ அப்பா அம்மா மீது சத்தியம் போட சொன்ன சேரன் டாஸ்க்கிற்காக

பிக்பாஸில் போட்டியாளர்கள் அனைவரும் இரு கிராமத்தினராக பிரிந்து தங்களது டாஸ்க்களை செய்து வருகின்றனர். லொஸ்லியா செம்பு ஒன்றை கட்டில் படுக்கைக்கு அடியில் ஒளித்து வைத்துவிடுகிறார்.

இந்த வழக்கில் நாட்டாமை சேரன்,லொஸ்லியாவை சுடும் வெயிலில் நாற்காலியில் கட்டி போட்டு வைக்க, சில நிமிடங்கள் கழித்து தர்ஷன் அந்த செம்பை கண்டுப்பிடித்துவிடுகிறார்.

சேரன் இதுபோல் இனி செய்யமாட்டேன் என தனது அப்பா, அம்மா மீது சத்தியம் பண்ண சொல்கிறார். இது லொஸ்லியாவை நேரடியாக பாதித்து உள்ளது போலும், சிரித்து கொண்டிருந்தவரின் முகம் சுருங்குகிறது. அதெல்லாம் பண்ண முடியாது என கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிடுகிறார்.

Leave a Reply