மருத்துவ குறிப்பு

ஆஸ்துமா வராமல் தடுப்பதற்கான சூப்பர் டிப்ஸ்……..

சுவாச நோயான ஆஸ்துமா வருவதற்கான முக்கிய காரணம் பரம்பரை மட்டுமல்ல சூழல் காரணிகளுமே. சுவாசிக்கும் காற்றில் உள்ள மாசுக்கள் நுரையீரலைச் சென்றடைவதனால் நுரையீரலில் பாதிப்புக்கள் ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் இருமல், இழுப்பு, கடினமான சுவாசம் போன்றவையே ஆஸ்துமாக்கான முதல் அறிகுறிகள் ஆகும்.

சுவாசக் குழாயில் ஏற்படும் வீக்கம், மற்றும் சுருக்கங்கள் மட்டுமல்லாது சளியினாலும் காற்று உட்செல்வதில் தடைகள் ஏற்படுவதுடன், சுவாசிப்பதில் கடினத் தன்மை ஏற்படுகின்றது. இதனால் ஆஸ்துமா வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.

ஆஸ்துமா நோயாளர்களிற்கு பொதுவாக மாசுக்கள், நுண்ணங்கி, குளிர்காற்று, புகை, வாசைனைத் திரவியங்கள் போன்றவற்றிற்கு ஒவ்வாமை ஏற்படுகின்றது. ஆஸ்துமாவை ஏற்படுத்தும் சரியான காரணியை கண்டறிந்து சிகிச்சை செய்வதனால் அதன் பாதிப்பைக் குறைக்க முடியும்.

ஆஸ்துமா வராமல் தடுப்பதற்கான வழிகள்.

1. ஈரப்பதத்தை தவிர்த்தல்.
சூழல் ஈரப்பதம் அதிகரிப்பதனால் ஆஸ்துமா வருவதற்கான் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதனால், குளிரூட்டியை பயன்படுத்தும் போது குறைவான குளிரைப் பேணுவதுடன், குலிர்காலத்தில் ஜன்னல்களை அடைப்பதன் மூலம் அதிகமான ஈரப்பத்தை தவிர்க்க முடியும்.

2. பூஞ்சை, பூஞ்சை காளான் வராமல் தடுத்தல்.
ஆஸ்துமாவை ஏற்படுத்தும் பூஞ்சை மற்றும் பூஞ்சை காளான் குளியலறை மற்றும் சமையலறையில் வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது. எனவே அப்பகுதிகளை சுத்தமாக வைத்திருப்பது அவசியமானது.

3. தூசுக்கள் உள்ள இடத்திற்கு செல்லாதிருத்தல்.
தூசுக்கள் மற்றொரு ஆஸ்துமாவை ஏற்படுத்தும் முக்கிய காரணியாகும். ஆடைகள், சலவை பவுடர், தலையணை, மெத்தை, தளபாடங்கள் போன்றவற்றில் உள்ள தூசுக்கள் ஆபத்தை ஏற்படுத்துவதனால் அவற்றை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது அவசியமானது. வக்யூம் பயனபடுத்தி மாதத்தில் இரு தடவைகளாவது வீட்டைச் சுத்தம் செய்வது அவசியமானது.

4. புகையைத் தவிர்த்தல்.
ஆஸ்துமா நோயாளாராக நீங்கள் இருந்தால் உங்கள் அருகில் மற்றவர்கள் புகைப்பிடிக்காமல் தடுப்பது அவசியமானது. அத்துடன் சமையலறையில் எக்ஸ்ராஸ்டர் மூலம் புகையை வெளியேற்றுவது சிறந்தது.

5. செல்லப்பிராணிகளிடம் இருந்து விலகி இருத்தல்.
செல்லப்பிராணிகளின் மென்முடிகளும், எச்சிலும் ஆஸ்துமாவை ஏற்படுத்தும். எனவே அவற்றை வீட்டிற்குள் அனுமதிப்பதைத் தவிர்ப்பது சிறந்தது.

6. மன அழுத்தத்தைத் தவிர்த்தல்.
மன அழுத்தம் அதிகரிப்பதனால் சுவாசிக்கும் வேகம் அதிகரிக்கும். இதனால் சுவாசக் குழ்ழய்களில் தடைகள் ஏற்படலாம். அத்துடன் மன அழுத்தம் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து விடுகிறது. இவற்றால் ஆஸ்துமா வரும் வாய்ப்புக்கள் அதிகரிக்கும். சுவாசப் பயிற்சிகள், தியானம், யோகா போன்றவற்றால் மன அழுத்தத்தைக் குறைப்பது அவசியமானது.

7. உடற்பயிற்சி செய்தல்.
ஆஸ்துமா நோயாளார்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலம் இதயம் மற்றும் நுரையீரலிற்கு அழுத்தம் கொடுப்பது அவசியமானது. வேகமாக நடத்தல், சைக்கிள் ஓடுதல், யோகா, நீச்சல் போன்ற பயிற்சிகள் மிகவும் சிறப்பானது.

8. நோய் அதிகம் வராமல் பாதுகாப்பாயிருத்தல்.
சுவாச நோய்களான இருமல், காய்ச்சல், சைனஸ் பிரச்சினையால் ஆஸ்துமா அதிகரிக்கச் செய்கின்றது. மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்படுவதனாலும் சுவாசக் குழாய்கள் சுருக்கம் அடைந்து ஆஸ்துமாக்கான வாய்ப்பை அதிகரிக்கச் செய்யும். எனவே நோய்கள் வராமல் பாதுகாப்பது அவசியமானது.

9. உணவுப் பழக்கங்களில் மாற்றங்கள் செய்தல்.
விட்டமின் சி, ஈ, ப்ஃளேவனோயிட், செலனியம் மக்னீசியம், ஒமேகா-3 உள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்வதுடன், பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், பால் உணவுப் பொருட்களையும் தவிர்த்தல் அவசியமானது.

10. ஈரப்பதமாக்கியை பயன்படுத்தாதிருத்தல்.
ஈரப்பதமாக்கியை பயன்படுத்துவதனால் வளியில் நீராவியை அதிகரிக்கச் செய்வதுடன், சில நுண்ணங்கிகளை வளரவும் செய்கிறது. இதனால் ஆஸ்துமாவால் பாதிப்படைந்து விடுகிறார்கள் எனவே முடிந்த வரை ஈரப்பதமாக்கிகளை பயன்படுத்தாதிருத்தல் சிறப்பானது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button