ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா அல்சர் நோயை விரைவில் குணமாக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

அன்றாடம் நாம் சாப்பிடும் உணவுகள் ஜீரணிப்பதற்கு, நமது வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் என்ற அமிலம் சுரக்கிறது.

இந்த அமிலமானது நமது வயிற்றில் அதிகமாக சுரப்பதால் இரைப்பையில் தீராத வலியுடன் புண் ஏற்பட்டு அது அல்சராக மாறுகிறது.

இந்த அல்சர் நோயானது, காலை உணவை தவிர்ப்பது அல்லது நேரம் தாழ்த்தி உண்பது இது போன்ற சில முக்கிய காரணங்களினால் ஏற்படுகிறது.

எனவே அல்சர் நோயை குணப்படுத்த நாம் தினமும் சாப்பிட வேண்டிய உணவுகளை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

வாழைத்தண்டு

வாழைத் தண்டுடன் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு அதை சட்னி போல் அரைத்து சாறு பிழிந்து தினமும் குடித்து வர வேண்டும். இதனால் அல்சர் மற்றும் சிறுநீரகக் கற்கள் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

கொத்தமல்லி

அல்சர் பிரச்சனை உள்ளவர்கள், தினமும் தங்களின் உணவில் கொத்தமல்லியை அதிகமாக சேர்த்து சாப்பிட வேண்டும்.

மேலும் கொத்தமல்லி பசியை தூண்டி, பித்தத்தைக் குறைத்து. காய்ச்சல், சளி, இருமல், மூலம், வாதம், நரம்புத்தளர்ச்சி போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக உள்ளது.

வல்லாரை

அல்சர், மஞ்சள் காமாலை, தொழுநோய், பேதி, நரம்புத்தளர்ச்சி, ஞாபக சக்தி போன்ற பிரச்சனைகளுக்கு வல்லாரைக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

மேலும் இந்த வல்லாரைக் கீரையை அல்சர் பிரச்சனை உள்ளவர்கள், தினமும் 2 வேளைகள் சிறிதளவு இலைகளை பச்சையாக சாப்பிட்டால், மிகவும் நல்லது.

வெங்காயம் மற்றும் பூண்டு

தினமும் சாப்பிடும் உணவில் வெங்காயம் மற்றும் பூண்டை அதிகமாக சேர்த்து சாப்பிட்டு வந்தால், அல்சர், ரத்த அழுத்தம், இருமல், ஆஸ்துமா, காய்ச்சல், கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.

மணத்தக்காளி கீரை

மணத்தக்காளி கீரையை தினமும் சமைத்து சாப்பிடுவதன் மூலம் வாய் புண், வயிற்று புண் போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக உள்ளது.

பச்சை வாழைப்பழம்

பச்சை வாழைப்பழம், வயிற்று உபாதையில் ஏற்படும் புண்களை போக்கும் தன்மைக் கொண்டது. எனவே அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் ஒரு பச்சை வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகிவிடும்.

Related posts

இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பை கரைக்கும் காளான்

nathan

ஆண்களே கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க முருங்கைக்காயில் இவ்வளவு நன்மைகளா?..

nathan

சளி தொல்லையை போக்கும் துளசி ரசம்

nathan
Live Updates COVID-19 CASES