உண்ண சிறந்த நேரம் எது? உடலினை உறுதி செய்யும் பேரிச்சை…

பேரிச்சம்பழம் மத்திய கிழக்கு நாடுகளில், அதிகம் பயன்படுத்தும் உணவு வகையாக பேரிச்சம்பழம் உள்ளது. மேலும் இது பாலைவனப் பகுதிகளில்லேயே அதிகம் பயிரிடப்படுகின்றது. இனிப்பாகவும் சுவையாகவும் இருக்க கூடியது இப் பழம். இதை புதிதாக அல்லது காய்ந்த வகையில் பயன்படுத்தலாம்.

பயன்பாடு

பேரிச்சம்பழத்தை கேக், புட்டிங், இனிப்பு வகைகள், உள்ளிட்ட உணவுகளில் சேர்த்து சாப்பிடலாம். அல்லது அப்படியே உண்ணலாம், சில நாடுகளில், வினீகர் அல்லது மது அல்லாத பானங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், மரத்தின் சாறு சிரப்புகள் செய்வதற்கும், பழத்தில் உள்ள விதைகள் சோப்பு மற்றும் அழகு சாதன பொருட்கள் செய்வதற்கும் பேரிச்சம்பழம் மரத்தின் பல்வேறு பகுதிகளும் பயன்படுத்தப்படுகின்றன.

ஊட்டச்சத்து

பேரிச்சம்பழங்கள், நார்ச்சத்துகள் நிறைந்தது. உடலிலுள்ள கொழுப்புகள் குறைய உதவும். இதனால், சீரான செரிமானம் இருக்கவும் வழிவகுக்கும். உணவுக்கட்டுப்பாடு நார்ச்சத்துகள் பெருங்குடல் புற்று நோய் வராமல் தடுக்கும்.

உடல் ஆற்றலை அதிகரிக்க உதவும்

குறைந்த கலோரிகளை பேரிச்சம்பழம் கொண்டுள்ளன. பேரிச்சம்பழத்தில் இரும்புச்சத்து அதிகம் . இரத்த அணுக்களின் அளவை பெருக்க உதவும். இரத்த சோகையால் பாதிப்படைந்தவர்கள், பேரிச்சம்பழம் சாப்பிடுவது சிறந்தது.

பேரிச்சம்பழம் , இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியா நாடுகளின் தேசிய சின்னமாக உள்ளது. வகையில் உலகம் முழுவதும், ஆண்டுக்கு நான்கு மில்லியன் டன் பேரிச்சம்பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும் படிக்க : நீரிழிவு நோயை இயற்கையாக தடுக்க உதவும் 3 உணவுகள்

Leave a Reply