சகுனி வேலையால் வெடித்த பூகம்பம்!! யார் அந்த துர்கா? முகேன் மறைத்த ரகசியத்தை போட்டுடைத்த வனிதா.!

பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 3 ,50 நாட்கள் முடிவடைந்து மிகவும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, ரேஷ்மா, சரவணன்,சாக்ஷி என 7 போட்டியாளர்கள் கடந்த நாட்களில் வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில் கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு பிரபல நடிகை கஸ்தூரி வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்துள்ளார். அதனைதொடர்ந்து தற்போது சிறப்பு விருந்தினராக வனிதா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தந்துள்ளார்.

அவர் வீட்டிற்குள் நுழைந்த முதலே சர்ச்சைகள் எக்கச்சக்கமாக கிளம்பியது. மேலும் போட்டியாளர்கள் அனைவரையும் மோசமாக விமர்சனம் செய்து பரபரப்பை கிளப்பினார். இந்நிலையில் சமீபகாலமாக காதலா நட்பா என குழம்பிக் கொண்டிருந்த முகேன் மற்றும் அபிராமிக்கு இடையே சகுனி வேலையை துவங்கி விட்டார் வனிதா.

அவர் அபிராமியிடம் முகேன் குறித்து தவறாக கூறுகிறார். மேலும் முகேன் பின்னால் நீ ஏன் சுற்றுகிறாய். துர்கா யார் என்று உன்னிடம் ஏதாவது கூறினானா என கொழுத்தி போடுகிறார். மேலும் இல்லை எனக்கூறி அபிராமி பெரும் குழப்பத்துடன் காணப்படுகிறார். இந வீடியோ வைரலான நிலையில் பிக்பாஸ் வீட்டில் பெரும் சர்ச்சைகள் மற்றும் பிரச்சினைகள் வெடிக்கும் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

துர்கா என்பவர் முகேனின் முறைப்பொண்ணு. மேலும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்பு முகேன் மற்றும் துர்கா இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தது.

Leave a Reply