அழகு குறிப்புகள்

அழகான நீண்ட கூந்தலுக்கு, பளபளக்கும் சருமம் அரிசி கழுவிய நீர்..!!

இன்றுள்ள பலர் பல்வேறு விதமான கால கட்டத்தில் பணியாற்றி வருகிறோம்., அந்த வகையில் பணியாற்றி வரும் நபர்கள் முகத்தின் அழகை பராமரிக்க வேண்டும் என்று விரும்புவது இயல்பு.. இயற்கையான முறையில் முகத்தின் அழகை அதிகரிப்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.

இந்த செய்தி குறித்த முழு வீடியோ பதிவு:
https://youtu.be/Duyoz_A__DE
தக்காளி பழத்தின் சாறை அரை தே.கரண்டியளவு எடுத்து கொண்டு அரை தே.கரண்டி தேனுடன் சிறிதளவு சமையல் சோடாவை சேர்த்து நன்றாக கலந்து கழுத்தில் தடவி வந்தால்., கழுத்தில் இருக்கும் கருவளையம் பிரச்சனையானது விரைவாக நீங்கும்.

நமது முகம் மற்றும் உடலை அழகூட்ட கடலை பருப்பை கால் கிலோ அளவிற்கும்., பாசி பருப்பை கால் கிலோ அளவுக்கும்., ஆவாரம் பூவை காய வைத்து சுமார் 100 கிராம் அளவிற்கும் எடுத்து கொண்டு., நன்றாக அரைத்து சோப்பு போட்டு குளிப்பதற்கு பதிலாக இந்த கலவையை அரைத்து தேய்த்து குளித்து வந்தால்., முகம் மற்றும் நமது உடலானது அழகு பெரும்.

இன்றுள்ள பெரும்பாலானோருக்கு இருக்கும் முகப்பருவின் தழும்பை மறைப்பதற்கு புதினா சாறுகளை சுமார் 2 தே.கரண்டி அளவும்., எலுமிச்சை சாற்றை ஒரு தே.கரண்டி அளவும்., பயத்தம் பருப்பின் மாவை சேர்த்து தழும்பு உள்ள இடத்தில் தேய்த்து வந்தால் முகத்தழும்பு பிரச்சனை நீங்கும்.
fngfjf
முகம் மென்மையாக மாறுவதற்கு வெள்ளரி சாற்றை சுமார் இரண்டு தே.கரண்டி அளவிற்கும்., புதினா சாற்றை அரை தே.கரண்டி அளவிற்கும்., எலுமிச்சை பழச்சாற்றை அரை தே.கரண்டி அளவிற்கும் எடுத்து கொண்டு தேய்த்து சுமார் 15 நிமி. கழித்த பின்னர் கழுவினால் முகமானது மென்மையாக மாறும்.

சிறிதளவு கேரட்டை எடுத்து கொண்டு நன்றாக அரைத்து., ஒரு தே.கரண்டி தேன் கலந்து நன்றாக கலக்கி., முகத்தில் தேய்த்த பின்னர் சுமார் 20 நிமி. கழித்த பின்னர் குளிர்ந்த நீரை கொண்டு கழுவி வந்தால் உலர்ந்த சருமமானது நன்றாக பொலிவு பெரும்.

தினமும் வீட்டில் பாலை காய்ச்சும் சமயத்தில் பால் கொதிக்கும் சமயத்தில் வரும் ஆவிக்கு அருகில் முகத்தை காண்பித்து., அந்த நீரை துடைக்காமல் சுமார் 30 நிமி. காத்திருந்து கழுவினால் முகமானது நல்ல பொலிவு பெரும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button