வனிதாவிடம் கெஞ்சும் கவின்..! இவ்வளவு எமோஷன் வேண்டாம் அக்கா..

இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோவில் முகினை நம்ப வேண்டாம் என அபிராமியிடம் கூறுகிறார் வனிதா. அதற்கான விளைவு சந்திப்புக் கூடத்தில் அரங்கேறுகிறது.

நேற்றுவரை இருந்த அபிராமி வேறு, வனிதா வந்த பிறகு இருக்கும் அபிராமி வேறு என்று கூறுகிறார் முகின். அதனால் கொதிப்படையும் அபிராமி, முகினை ஒருமையில் பேசு பிரச்னையை பெரிதாக்குகிறார்.

பொறுமை இழக்கும் முகின், நாற்காலியை தூக்கி அபிராமியை அடிக்க பாய்கிறார். உடனே மற்ற போட்டியாளர்கள் அனைவரும் அவரை தடுக்கின்றனர். அபிராமியை வனிதா மட்டுமே கட்டுப்படுத்துகிறார். மற்ற பெண் போட்டியாளர்கள் விலகியே நிற்கின்றனர்.

அதை தொடர்ந்து முகினை உள்ளே அழைத்துச் செல்லும் ஹவுஸ்மேட்ஸ், அவரை சமாதானம் செய்கின்றனர். அங்கே வனிதாவும் வருகிறார். அப்போது நடந்த சம்பவங்களுக்கு வனிதா தான் காரணம் என்பது போல பேசுகிறார் சாண்டி.

இதை கேட்கும் வனிதா, இந்த வீட்டில் பல பிரச்னைகள் ஏற்கனவே நடந்து வருகின்றன. இதுவொன்றும் புதிய சண்டை கிடையாது என விளக்கம் அளிக்கிறார். எனினும் அதை ஏற்க மறுக்கிறார் சாண்டி. இதற்கிடையில் முகின் உடைந்து அழுகிறார்.

வனிதாவை பார்க்கும் கவின், தயவு செய்து உணர்வுகளை வெளிகாட்டும் செயலை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள் என்பதுடன் அந்த ப்ரோமோ நிறைவடைகிறது. வனிதா வெளியேறிய பிறகு தான் பிக்பாஸ் வீடு கொஞ்சம் அமைதியானது. மீண்டும் நிகழ்ச்சிக்குள் அவர் மறுபிரவேசம் செய்துள்ளார். இது பெரிய சச்சரவை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply