எப்டி தெரியுமா மாதுளையை பயன்படுத்தி கவர்ச்சியான உதடுகளை பெறுவது?

மாதுளையில் நிறைய சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. மேலும் இந்த பழம் ஆக்ஸிஜனேற்றிகள் அதிக அளவில் உள்ளதால் இவை வயதான தோற்றத்தை எதிர்க்கும் பண்புகளை கொண்டுள்ளது.

மாதுளை என்பது மிகவும் சத்துக்கள் நிறைந்த ஒரு ருசியான பழமாகும். மாதுளை என்பது சமையல் ருசியான ஜூஸ்கள் மற்றும் டெஸர்ட்களில் மட்டும் பயன்படுத்தி வந்தனர். ஆனால் அது உங்கள் சருமத்திற்கு தேவையான பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. மாதுளையில் நிறைய சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. மேலும் இந்த பழம் ஆக்ஸிஜனேற்றிகள் அதிக அளவில் உள்ளதால் இவை வயதான தோற்றத்தை எதிர்க்கும் பண்புகளை கொண்டுள்ளது மற்றும் அழகான சருமத்தை தர உதவுகிறது.

ஒரு நல்ல ஆரோக்கியமான உணவு உங்களையும் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. மாதுளை சரும பாதுகாப்பு, உங்களின் வயதான தோற்றத்தை எதிர்க்க மற்றும் உங்களை ஆரோக்கியமாக வைக்க எல்லா வகையிலும் உதவுகிறது.

முகப்பரு

உங்கள் அழகான முகத்தில் முகப்பரு பிரச்சனை இருந்தால் சற்று எரிச்சலாக தான் இருக்கும். மாதுளை இருப்பதால் உங்களுக்கு இனி அந்தக் கவலை வேண்டாம். பெரும்பாலும் முகப்பரு ஹார்மோன்களின் பற்றாக்குறையால் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், முகத்தில் எண்ணெய் வடிவதாலும் முகப்பரு ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் மாதுளையை முகத்தில் தடவுவதால் முகப்பருவை மறைய வைக்கலாம். 1 தேக்கரண்டி மாதுளை, 2 தேக்கரண்டி பிரவுன் சுகர், 1 தேக்கரண்டி தேன் மற்றும் ஆரஞ்சு பொடி சேர்த்து கலந்து மாஸ்க்காக போட்டுக் கொண்டு 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். உங்கள் முகப்பரு சில நாட்களிலேயே மறைந்து விடும். இந்த கலவையை நீங்கள் குளிர்சாதன பெட்டியில் வைத்துக் கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.

இளமையான சருமம்

காற்று மாசுபாடு, வாழ்க்கைமுறை மற்றும் மன அழுத்தம் ஆகியவை உங்கள் இளமையான சருமத்தை கெடுக்கும். ஆனால் ஆரோக்கியமான இந்த மாதுளை இதனை தடுக்க உங்களுக்கு உதவும். இதனை தினமும் காலை நீங்கள் வெறும் வயிற்றில் உண்ணலாம் அல்லது தேன், தயிர் மற்றும் மாதுளை சேர்த்து ஒரு பேஸ்ட் போல் தயார் செய்துக் கொள்ளுங்கள். வேண்டுமென்றால் சிறிது லெமன் சேர்த்து கொண்டு இதனை வாரத்திற்கு 2 முறை முகத்தில் தடவி வந்தால் உங்கள் சருமம் எப்போதும் இளமையாக இருக்கும்.

MOST READ: முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் போகவே மாட்டேங்குதா? அப்போ அத மறைச்சுருங்க.

பளபளப்பான உதடுகள்

உங்களுக்கு மிகவும் அழகான மற்றும் சிவப்பு நிற உதடுகள் வேண்டுமென்றால் நீங்கள் மாதுளையை பயன்படுத்தலாம். நீங்கள் மாதுளை உபயோகித்தப் பின்பு உங்களுக்கு லிப்ஸ்டிக் தேவைப்படாது. முதலில் ஒரு தேக்கரண்டியளவு ஆலிவ் ஆயில், தேன், மற்றும் தேங்காய் எண்ணெய் எடுத்து சூடுபடுத்திக் கொள்ளுங்கள். இதனுடன் மாதுளை ஜூஸ் சேர்த்துக் கொண்டு சரியான நிலைக்கு வரும் வரை சூடுபடுத்தி எடுத்துக் கொள்ளுங்கள். இதனை வடிகட்டி ஆறவிடுங்கள். பின்பு குளிர்சாதன பெட்டியில் வைத்து தேவையான போது நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தோல் அழற்சி

இப்போது தோல் அழற்சி என்பது சாதாரணமான விஷயமாக மாறிவிட்டது. பல பேர் தோல் அழற்சியால் பாதிக்கப்படுகிறார்கள். மாதுளை எண்ணெய் கடைகளில் சாதாரணமாக கிடைக்கிறது. அதனை வாங்கி உங்களது தோலில் நீங்கள் நேரடியாக தடவலாம். இரண்டு அல்லது மூன்று துளிகள் விட்டு வட்ட வடிவில் மசாஜ் செய்யுங்கள். இந்த மாதுளை எண்ணெய் உங்கள் தோல் அழற்சியை மீட்டுத் தரும்.

இறந்த செல்களை மீட்டுதல்

நமது சருமத்தில் உள்ள செல்கள் தினமும் இறக்கவும் மேலும் புதிய செல்களும் உருவாகிறது. இந்த புதிய செல்கள் உருவாக மாதுளை உதவுகிறது. எனவே தினமும் உங்கள் உணவில் மாதுளை சேர்த்துக் கொள்ளுவது நல்லது. சந்தைகளில் பொதுவாக மாதுளை ஆயில் கிடைக்கும் அதனை வாங்கி தினமும் உங்கள் முகங்களில் தடவிக் கொள்ளுங்கள். குறைந்தது ஒரு வாரத்தில் நீங்கள் மாற்றத்தை உணருவீர்கள். மேலும் உங்கள் சருமம் மென்மையாக மற்றும் உறுதியானதாக உணருவீர்கள். இந்த எண்ணையை பயன்படுத்தி நிறைய சன் க்ரீம்கள் மற்றும் முகப்பரு க்ரீம்களும் வரத் தொடங்கியுள்ளது. அவற்றையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

MOST READ: உங்கள் சருமம் மற்றும் தலை முடியில் இந்த பழங்களை பயன்படுத்தலாமா?

நீரேற்றம்

உங்கள் சருமம் மிகவும் வறண்ட, வெடித்த மற்றும் உடைந்த சருமமாக உள்ளதா இதற்கான தீர்வும் மாதுளை கொண்டுள்ளது. நீங்கள் தினமும் மாதுளை சாப்பிடுவதால் இது உங்கள் சருமத்தை நீரேற்றத்துடன் வைக்க உதவுகிறது அல்லது நீங்கள் மாதுளை ஜூஸ் எடுத்து நேரடியாக உங்கள் முகத்தில் தடவி கொள்ளலாம். இல்லையெனில் நீங்கள் தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் பருகலாம்.

சரும ஊட்டச்சத்து

ஊட்டச்சத்துக்காக மாதுளை பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தற்போது மிக எளிதில் கிடைக்க கூடியதாகவும் மேலும் அதிக அளவில் சரும பாதுக்காப்பில் பயன்படுத்தப்படுகிறது. உங்கள் சருமத்திற்கு ஊட்டச்சத்து அளிக்க வேண்டுமானால் நீங்கள் மாதுளையை தேர்ந்து எடுக்கலாம்.

Leave a Reply