கவின் மீது பாய்ந்த மது.. அப்போ சாக்‌ஷி சொன்னது உண்மைதானா? பெண்களை நீங்க நல்லா யூஸ் பண்ணிக்கிறீங்க..

பிக் பாஸ் வீட்டில் உள்ள ஆண்கள் பெண் போட்டியாளர்களை சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்வதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் மது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரொமோ வெளியாகியுள்ளது. ஏற்கனவே நேற்று முகென் – அபி இடையேயான பிரச்சினை ஏறக்குறைய கைகலப்பாகும் நிலைக்கு சென்று விட்டது. இதனால் பிக் பாஸ் வீடே ஒரே கூச்சலும், குழப்பமுமாக இருந்தது.

இந்நிலையில், இன்று கவினுக்கும், மதுவுக்கும் ஏதோ பிரச்சினை ஏற்பட்டிருப்பது இந்தப் புரொமோவைப் பார்க்கும் போது நன்றாகத் தெரிகிறது.

கோபம்:
மதுவின் குற்றச்சாட்டு:

இதில் மிகவும் கோபமாக கவினிடம் பேசுகிறார் மது. ‘பெண்களை பிக் பாஸ் வீட்டில் ஆண் போட்டியாளர்கள் அடிமையாக நடத்துகிறார்கள். தங்கள் சுயநலத்துக்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்’ என அடுக்கடுக்காக மது குற்றம் சாட்டுகிறார். கவினும் அதற்கு பதில் தருகிறார்.

வனிதா:
வனிதா காரணம்?

லிவ்விங் ஏரியாவில் நடக்கும் இந்தப் பிரச்சினையை, ‘எனக்கு எதுவும் தெரியாதுப்பா’ என்ற ரேஞ்சுக்கு அமைதியாகப் பார்க்கிறார் வனிதா. சமையல் செய்து கொண்டே அவர் சண்டையை ரசிக்கும் அழகிலேயே, பிரச்சினையை கொளுத்திப் போட்டதே அவர்தான் எனத் தெரிகிறது.

மன்னிப்பு:
மன்னிப்பு கேட்ட அபி:

நேற்று சண்டைக்குப் பிறகு வழக்கம் போல் அபி வந்து முகெனிடம் மன்னிப்பு கேட்டார். இதனால் அப்பிரச்சினை இன்றைக்கும் தொடராது எனத் தெரிந்தது. சரி இன்று வேறு ஏதாவது ஜாலியாக டாஸ்க் பண்ணுவார்கள் என்று பார்த்தால், நம்மைக் காலி பண்ணுவது மாதிரி இன்னமும் கத்திக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

கவலை:
கோரிக்கை:

இன்னும் எத்தனை நாள் வனிதா பிக் பாஸ் வீட்டில் இருக்கப் போகிறாரோ, இன்னும் யார்யாரையெல்லாம் சண்டை போட வைக்கப் போகிறாரோ என நெட்டிசன்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இப்படி சண்டையாக மட்டும் போட்டுக் கொண்டிருக்காமல், ஏதாவது ஜாலி டாஸ்க் கொடுங்க பிக் பாஸ் என அவர்கள் கோரியும் வருகின்றனர்.

Leave a Reply